Screen Reader Access     A-AA+
அருள்மிகு யோக நரசிம்ம சுவாமி திருக்கோயில், வேளச்சேரி, சென்னை - 600042, சென்னை .
Arulmigu Yoga Narasimma Swamy Temple, Velachery, Chennai - 600042, Chennai District [TM000203]
×
Temple History

தல வரலாறு

இத்திருத்தலம் பழமையான திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் தொடர்ந்து மழை பெய்து, அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாகவும், அதை தடுக்க பல முனிவர்களும், வேத பண்டிதர்களும் ஒன்றிணைந்து இக்காலத்தில் தொடர்ந்து வேள்விகள் செய்ததின் விளைவாக அவர்களுக்கு திருமால் யோகநரசிம்மராக காட்சி தந்ததாகவும், தொடர்ந்து வேள்வி நடந்த இடமாக இருந்ததால், வேள்விச்சேரி என மருவியதாகவும் கூறப்படுகிறது. பெருமாளின் அவதாரங்களின் கோஷ்ட மூர்ததங்களிலும், நரசிம்மரின் ஜ்வாலா, சாத்திர வதம், பரவணன் போன்ற பலவிதமான தோரணங்கள் கீழே கருடாழ்வாருக்குப் பதிலாக மூலவருக்கு எதிரே பிரகலாத் சன்னதி உள்ளது.