Screen Reader Access     A-AA+
அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை - 604304, விழுப்புரம் .
Arulmigu Chandramouleeswarar Temple, Thiruvakkarai - 604304, Viluppuram District [TM020341]
×
Temple History

தல வரலாறு

வக்ராசூரன் என்னும் அரக்கன் தன் தவ வலிமையால் சாகா வரம் பெற்று தேவர் முதலானவர்களை கொடுமைகள் செய்து வந்தான். சிவபெருமானின் கட்டளையால் அசுரன் வக்ராசூரனை வரதராஜ பெருமாள் வதம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை வக்ர காளி வதம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்ததால், குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை வதம் செய்தாள். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள். சம்காரம் பண்ணியதால் ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை...

தல பெருமை

முதலாம் ஆதித்த சோழன் தொடங்கி சோழ மன்னர்கள் பலர் இந்தக் கோவிலைப் புதுப்பித்தும் விரிவு படுத்தியும் வந்திருக்கிறார்கள். மிகப் பழமையான பெருமையும், புனிதமும், சிறப்புகளும் நிறைந்த திருவக்கரை உண்மையிலேயே ஒரு சிவஸ்தலம் ஆகும். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழார், அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள் ஆகிய அருளாளர்கள் திருவக்கரை அருள்மிகு சந்திரமவுலீசுவரரைப் பாடி உள்ளனர். தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசந்திர மவுலீஸ்வரர் தான் ஆலயத்தில் வக்ர காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இத்திருத்தலம் மூலவராக உள்ள சந்திரமவுலீஸ்வரரின் பெயரில் விளங்கினாலும், வக்கிர காளியம்மனே பிரசித்தி பெற்று விளங்குகிறார். இங்கு நடராஜர் தன் இயல்பான தாண்டவத்தினின்றும் மாறுபட்டு வக்கிர தாண்டவம் ஆடுவது குறிப்பிடத்தக்கது. சாஸ்திரப்படி முக லிங்கங்களின் முகங்கள் வெவ்வேறு முறையில்...