1. மருதூர் - 05.10.1823 ல் வள்ளலார் பிறந்த இல்லம்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், மருதூர் கிராமத்தில் 05.10.1823 ல் இராமையாப் பிள்ளை-சின்னம்மையாருக்கு, திருஅருட்பிரகாச வள்ளற்பெருமானார் ஐந்தாவது குழந்தையாக அவதரித்தார். பெற்றோர் இவருக்கு இராமலிங்கம் என்று பெயரிட்டனர். வள்ளலார் பிறந்த இல்லம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாட்டு ஸ்தலமாக திகழ்கின்றது. இங்கு அணையா தீபம் உள்ளது. இங்கு தினசரி காலை, மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.
2. கருங்குழி 1858 - 1867- தண்ணீரால் விளக்கு ஏற்றிய இல்லம்
திருஅருட்பிரகாச வள்ளற்பெருமானார் சென்னை வாழ்க்கையை நீத்து, சிதம்பரம் தில்லை நடராஜர் வழிபாடு காலத்தில், வடலூருக்கு அருகிலுள்ள கருங்குழி கிராம மணியக்காரர்...1. மருதூர் - 05.10.1823 ல் வள்ளலார் பிறந்த இல்லம்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், மருதூர் கிராமத்தில் 05.10.1823 ல் இராமையாப் பிள்ளை-சின்னம்மையாருக்கு, திருஅருட்பிரகாச வள்ளற்பெருமானார் ஐந்தாவது குழந்தையாக அவதரித்தார். பெற்றோர் இவருக்கு இராமலிங்கம் என்று பெயரிட்டனர். வள்ளலார் பிறந்த இல்லம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாட்டு ஸ்தலமாக திகழ்கின்றது. இங்கு அணையா தீபம் உள்ளது. இங்கு தினசரி காலை, மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.
2. கருங்குழி 1858 - 1867- தண்ணீரால் விளக்கு ஏற்றிய இல்லம்
திருஅருட்பிரகாச வள்ளற்பெருமானார் சென்னை வாழ்க்கையை நீத்து, சிதம்பரம் தில்லை நடராஜர் வழிபாடு காலத்தில், வடலூருக்கு அருகிலுள்ள கருங்குழி கிராம மணியக்காரர் வெங்கட ரெட்டியார் என்பவர் இல்லத்தில் 1858 முதல் 1867 வரை 9 ஆண்டுகள் தங்கி இருந்தார்கள். இங்குதான் தண்ணீரால் விளக்கெரித்து திருஅருட்பாவில் நான்காம் திருமுறை மற்றும் ஆறாம் திருமுறையின் முன்பகுதியை எழுதினார்கள். வள்ளலார் வாழ்ந்த இல்லம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாட்டு ஸ்தலமாக விளங்குகின்றது. இங்கு அணையா தீபம் உள்ளது. இங்கு தினசரி காலை, மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.
3. சமரச சுத்த சன்மார்க்க சங்கம் 1865
கடவுள் ஒருவரே என்பதும் அவரை உண்மை அன்பால் ஒளி ஜோதி வடிவில் வழிபட வேண்டும் என்பதும், சிறு தெய்வ வழிபாடு கூடாது என்பதும், அத்தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கூடாது என்பதும், புலால் உண்ணக்கூடாது என்பதும், சாதி சமய முதலிய எவ்வகை வேறுபாடுகளும் கூடாது என்பதும் வள்ளலாரின் முக்கிய நெறிகளாகும். இந்நெறிகளை பின்பற்றவும், பரப்பவும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை 1865 ஆம் ஆண்டில் நிறுவினார்கள். வள்ளற்பெருமானார் நிறுவிய சன்மார்க்க சங்கம், வடலூரில் சத்திய தருமச்சாலையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.
4. சத்திய தருமச்சாலை, வடலூர் 23.05.1867
வள்ளற்பெருமானாரின் கொள்கையில் தலையாயது சீவகாருணியம். அற்றார் அழிபசி தீர்த்தலாகிய சீவகாருணிய பேரறத்தை நடத்துவதற்காக வடலூரில் சத்திய தருமச்சாலையை 23.05.1867 ல் பிரபவ வைகாசி 11 ஆம் நாளில் நிறுவினார்கள். தருமச்சாலையை நிறுவியபின் அதனையே உறைவிடமாகக் கொண்டார்கள். 1870 ஆம் ஆண்டு வரை தருமச்சாலையிலே வாழ்ந்தார்கள். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய பெருமானாரின் அருளினால் தருமச்சாலையில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட அன்பர்களுக்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
5. சத்திய ஞானசபை , வடலூர் 25.01.1872
கடவுளை அருட்பெருஞ்ஜோதி வடிவில் கண்ட பெருமானார் அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டிற்கென வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார்கள். 1871 ஆண்டில் சத்திய ஞானசபை கட்டத் தொடங்கப் பட்டது. 25.01.1872 ல் தை, 13 வியாழக்கிழமை பூச நன்நாளில் முதன் முதலாக ஞானசபையில் வழிபாடு தொடங்கப் பெற்றது. பிரதி தைப்பூசம் தோறும் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. பிரதி மாதப்பூசம் தோறும் ஆறு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. பெருமானார் திருக்கரத்தால் ஏற்றிய அணையா தீபம் வழிபாட்டில் உள்ளது. உலகில் எங்குமில்லாத அமைப்பாக சத்திய ஞானசபையில் சாதி, மத, இனம், மொழி, நாடு போன்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து மக்களும் வழிபடுகின்றனர்.
6. சித்தி வளாகத் திருமாளிகை , மேட்டுக்குப்பம் 1870
வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில் வள்ளற்பெருமானார் தங்கியிருந்த திருமாளிகைக்கு சித்தி வளாகம் என்று பெயர். இப்பெயர் பெருமானாரே இட்டது. மஞ்சள், வெள்ளை ஆகிய இரு நிறங்கள் கொண்ட சன்மார்க்க கொடியை மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் 22.10.1873 ஸ்ரீமுக ஆண்டு ஐப்பசி 7 ம் நாள் காலை 8 மணியளவில் சன்மார்க்க கொடி கட்டி பேருபதேசம் செய்தார்கள்.
சித்தி வளாக திருமாளிகையில் 30.01.1874 இரவு 12.00 மணியளவில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் இரண்டறக் கலந்தார்கள். வள்ளலார் திருக்கரத்தால் ஏற்றிய சத்திய ஞான ஜோதி 155 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாட்டில் உள்ளது.
வள்ளற்பெருமானாருக்கு முன்னர் தோன்றிய அருளாளர்கள் கடவுளை தேடி இரண்டற கலந்தார்கள். இறைவனே வள்ளற்பெருமானாரை தேடி வந்து அருட்பெருஞ்ஜோதி இறவா பெருநிலையை அருளினார்கள்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி