அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 1. மருதூர் - 05.10.1823 ல் வள்ளலார் பிறந்த இல்லம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், மருதூர் கிராமத்தில் 05.10.1823 ல் இராமையாப் பிள்ளை-சின்னம்மையாருக்கு, திருஅருட்பிரகாச வள்ளற்பெருமானார் ஐந்தாவது குழந்தையாக அவதரித்தார். பெற்றோர் இவருக்கு இராமலிங்கம் என்று பெயரிட்டனர். வள்ளலார் பிறந்த இல்லம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாட்டு ஸ்தலமாக திகழ்கின்றது. இங்கு அணையா தீபம் உள்ளது. இங்கு தினசரி காலை, மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. 2. கருங்குழி 1858 - 1867- தண்ணீரால் விளக்கு ஏற்றிய இல்லம் திருஅருட்பிரகாச வள்ளற்பெருமானார் சென்னை வாழ்க்கையை நீத்து, சிதம்பரம் தில்லை நடராஜர் வழிபாடு காலத்தில், வடலூருக்கு அருகிலுள்ள கருங்குழி கிராம மணியக்காரர் வெங்கட ரெட்டியார் என்பவர் இல்லத்தில் 1858 முதல்...