Screen Reader Access     A-AA+
Government of Tamil Nadu
Hindu Religious & Charitable Endowments Department
×
Go-Top

Thirukoil magazine overview

திருக்கோயில் திங்களிதழ்:

இணையத்தில் (ஆன்லைனில்) புத்தகம் பெற

திருக்கோயில் என்னும் பெயரில் 1958இல் தொடங்கப்பட்ட இவ்விதழ் திருக்கோயில் அமைப்புகள், திருக்கோயில் வழிபாடுகள், திருக்கோயில் பூஜை முறைகள், கோயிற்கலை, சிற்பத் திருமேனிகள், அதன் வழிபாடுகள், பண்டிகைகள், திருவிழாக்கள், இந்துக்களின் சடங்கு முறைகள் குறித்த கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.

ஆன்மாக்கள் இந்து சமயக் கோட்பாடுகளுடன்; உலகத்தோற்றத்தின் முக்கியத்துவத்தை அறியும் வண்ணம் சைவ வைணவ சமயத்தின் குருமார்களும் ஆச்சார்யார்களும் காட்டிச் சென்ற சித்தாந்தம் மற்றும் வேதாந்த (அத்வைத விசிட்டாத்வைத துவைத) கொள்கைகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நடைமுறை விளக்கங்களோடு கட்டுரைகளும் வெளியிடப்படுகின்றன.

பக்தி இலக்கியங்களான திருமுறைப் பாயிரங்களால் பாடல்பெற்ற திருக்கோயில்கள் நாலாயிரத்திவ்ய பிரபந்த பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள் என தனிச் சிறப்பாக உலகமக்கள் அறியும் வகையில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அண்மைக்கால அருளாளர்களான இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், பாம்பன் சுவாமிகள், அருட்பிரகாச வள்ளலார் போன்ற அருளாளர்களின் கொள்கைகளும் அவர்களின் படைப்புகள் குறித்த கட்டுரைகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

ஒவ்வொரு மாத நிகழ்வுகளாக திருக்கோயில்களில் நடைபெறும் சிறப்புநிகழ்வுகள், பக்திக் களஞ்சிய வினா-விடை என ஆன்மிகத் தகவல்களோடு எண்ணற்ற சமயச் சிந்தனைகளை முறையாக ஆற்றுப்படுத்தும் பணியை இவ்விதழ் செவ்வனே செய்து வருகிறது.

இதழ் சந்தா விபரம்:

  1. தனி இதழின் விலை - 35
  2. ஓராண்டுச் சந்தா - 420
  3. ஐந்தாண்டுச் சந்தா - 2100
  4. பத்தாண்டுச்சந்தா - 4200
  5. ஆயுட்காலச் சந்தா - 6300 (ஆயுட்காலம் 15 ஆண்டுகள் மட்டும்).

இதற்கான பணவிடை அல்லது வரைவோலையை Commissioner, HR & CE Dept., Chennai-34 என்ற பெயரில் எடுத்து கீழ்க்கண்ட துறை முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி:

முதன்மை பதிப்பாசிரியர்,
பதிப்பகப்பிரிவு, இந்து சமய அறநிலையத்துறை,
119, உத்தமர் காந்தி சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை – 600 034.

கிடைக்குமிடம்:

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள பக்தி நூல் விற்பனை மையங்களில் கிடைக்கும். அலுவலக முகவரியில் நேரடியாகக் கிடைக்கும். இவ்விதழ் தனியார் கடைகளில் கிடைக்காது. இணையம் வாயிலாகவும் சந்தாதாரர் ஆகலாம் https://hrce.tn.gov.in உசாத்துணை அலுவல்முறை இணையத்தளம்.

நிருவாகம்:

திருக்கோயில் இதழின் அலுவல் வழி சிறப்பு ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இருக்க, ஆசிரியர்களாக 1958இல் இருந்து நா.ர.முருகவேள், தொடங்கி தற்பொழுது திரு. கே.வீ. முரளீதரன் இ.ஆ.ப. (ஆணையர்) வெளியீட்டாளராகவும், சிறப்பாசிரியராகவும் இருக்கிறார். இதழ்ஆசிரியராக முனைவர் ஜெ.சசிக்குமார் இருந்து வருகிறார்.

அலுவலகம்:

முகவரி: ஆசிரியர்,
திருக்கோயில் திங்களிதழ்,
இந்துசமய அறநிலையத்துறை,
119, உத்தமர் காந்தி சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை-600034.
மின் அஞ்சல்:publication[dot]hrce[at]tn[dot]gov[dot]in
இணையதளம்: https://hrce.tn.gov.in
தொலைப்பேசி: 044-28339999, 18004251757.

இணைய வழியில் பணம் செலுத்தி இதழை வரவழைக்க :

இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில் இதழ்ப் பிரிவால் பக்தர்கள் மற்றும் தேர்வு நோக்கில் வாசிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இணையம் வாயிலாகப் பணம் செலுத்தி வீட்டிற்கே புத்தகம் அனுப்பி வைக்கும் திட்டம் (Online Book Delivery) தொடங்கப்பட்டது. தாங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு அஞ்சலில் இதழ் அனுப்பி வைக்கப்படும். இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் இணையத்திலேயே பணம் செலுத்தினால் போதும் தங்களது முகவரிக்கு இதழ் அனுப்பி வைக்கப்படும்.

வெளியீடுகள்:

இந்து சமய அறநிலையத்துறை சார்பாகப் பதிப்பகப்பிரிவு தொடங்கப்பட்டு தல வரலாறு, தல புராணங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள், கட்டடக்கலை நூல்கள், சமயம் சார்ந்த புதிய நூல்கள் மற்றும் ஆகமங்கள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழ்மொழி வல்லுநர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட 108 அரிய நூல்கள் முதற்கட்டமாகப் பதிப்பிக்கப்பட்டு 19.01.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 108 அரிய ஆன்மிக நூல்கள் பதிப்பிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இணையத்தளத்தில் இந்து சமய அறநிலையத்துறை வெளியீடாக ஆன்மிக அன்பர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு சமய நூல்கள் கீழ்க்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளன.

108 நூல் பட்டியல் தொடர்ந்து பதிப்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய வெளியீடுகள் வெளியிட்டவுடன் இணையத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இந்நூல்களைப் பெற விரும்புபவர்கள் அதற்குரிய தொகையினை இணைய வழியாகச் செலுத்தினால் தங்கள் வீட்டின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.