இந்து சமய அற நிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் 46,214 இந்து சமய மற்றும் சமண சமய திருக்கோயில்கள் உள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:
1 | திருக்கோயில்கள் | 43,685 | |
2 | சமணத் திருக்கோயில்கள் | 22 | |
3 | திருமடங்கள் | 45 | |
4 | திருமடத்துடன் இணைந்த திருக்கோயில்கள் | 69 | |
5 | அறக்கட்டளைகள் | 1,263 | |
6 | குறிப்பிட்ட அறக்கட்டளைகள் | 1,130 | |
46,214 |
1 | பட்டியலிடப்பட்ட திருக்கோயில்கள் | 10,033 | |
2 | பட்டியலிடப்படாத திருக்கோயில்கள் | 36,181 | |
46,214 |
பட்டியலிடப்பட்ட திருக்கோயில்கள் மற்றும் பட்டியலிடப்படாத திருக்கோயில்களின் வருடாந்திர வருமானம் அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்து சமய திருக்கோயில்கள்
1 | பிரிவு 46(III) இன் கீழ் | வருடாந்திர வருமானம் ரூ. 10 லட்சம் மற்றும் அதற்கும் மேல் | 586 | |
2 | பிரிவு 46(II) இன் கீழ் | வருடாந்திர வருமானம் ரூ. 2 லட்சம் மற்றும் ரூ. 10 லட்சம் குள் | 619 | |
3 | பிரிவு 46(I) இன் கீழ் | ரூ. 10,000 மற்றும் 2 லட்சத்திற்கும் குறைவாக வருடாந்திர வருவாயைக் கொண்டுள்ளது | 3,818 | |
4 | பிரிவு 49(I) இன் கீழ் | ரூ. 10,000 க்கும் குறைவான வருடாந்திர வருவாயைக் கொண்டிருக்கிறது | 34,716 | |
5 | உபகோயில்கள் | - | 6,430 | |
6 | திருமடங்கள் | - | 45 | |
46,214 |
இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் கீழ் இந்து சமய திருக்கோயில்களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்வதற்காக பரம்பரை நிர்வாகத்தில் இல்லாத ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு அறங்காவலர் குழுவிலும் மூன்று அறங்காவலர்களுக்கு குறையாமலும், ஐந்து அறங்காவலர்களுக்கு மிகாமலும் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். இக்குழுவில் பெண் உறுப்பினர் ஒருவரும் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த உறுப்பினர் ஒருவரும் இடம் பெற வேண்டும். இக்குழுவின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் ஆகும்.
அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் முடிந்த பின்னர் அல்லது தற்காலிகமாக காலியிடம் ஏற்படும் பொழுது அடுத்த அறங்காவலர் குழுநியமனம் செய்யப்படும் வரை, திருக்கோயிலின் அறங்காவலருக்குரிய கடமைகளை செய்திட இடைக்கால ஏற்பாடாக தகுதியான ஒருவர் தக்காராக நியமனம் செய்யப்படுவார்.
இந்து சமய திருக்கோயில்களுக்குச் சொந்தமாக 4,78,283.59 ஏக்கர் பரப்பளவுடைய நிலங்கள் கீழ்க்காணும் விவரப்படி உள்ளன :
வ.எண் |
(ஏக்கர் இலட்சத்தில்) |
|||
---|---|---|---|---|
நிலத்தின் வகைப்பாடு |
திருக்கோயில் நிலங்கள் |
திருமடம் நிலங்கள் |
மொத்த நிலங்கள் |
|
1. |
நன்செய் |
1.83 |
0.21 |
2.04 |
2. |
புன்செய் |
2.18 |
0.35 |
2.53 |
3. |
மானாவாரி |
0.21 |
இல்லை |
0.21 |
கூடுதல் |
4.22 |
0.56 |
4.78 |
இந்து சமய திருக்கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை 1,23,729 குத்தகைதாரர்கள் பயிர்செய்து வருகின்றனர்.
இந்து சமய திருக்கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களுக்கு வரவேண்டிய குத்தகை நிலுவைத்தொகைகளை வசூல் செய்யவும், விவசாய நிலங்களுக்கு நியாய வாடகை நிர்ணயிக்கவும், குத்தகை செலுத்த மறுக்கும் குத்தகைதாரர்களை வெளியேற்றவும், தமிழ்நாடு பொது பொறுப்புரிமை விவசாய நிலங்கள் ஒழுங்குபடுத்தும் மற்றும் மேலாண்மை சட்டம், 1955 (TamilNadu Cultivating Tenants Protection Act, 1955)-ன்படி கீழ் கண்ட இடங்களில் வருவாய் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
வருவாய் நீதிமன்றங்கள் | முகாம் வருவாய் நீதிமன்றங்கள் |
---|---|
1. தஞ்சாவூர் | 1. கும்பகோணம் |
2. திருச்சிராப்பள்ளி | 2. சேலம் |
3. மயிலாடுதுறை | 3. தென்காசி |
4. திருவாரூர் | |
5. கடலூர் | |
6. மதுரை | |
7. லால்குடி | |
8. மன்னார்குடி, | |
9. நாகப்பட்டினம் | |
10. திருநெல்வேலி |
மேற்கண்ட வருவாய் நீதிமன்றங்களில் லால்குடி, மன்னார்குடி, நாகப்பட்டினம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 இடங்களில் உள்ள வருவாய் நீதிமன்றங்கள் 2012-2013 ஆம் ஆண்டு முதல் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
மேற்கண்ட வருவாய் நீதிமன்றங்களில் 13260 வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்டள்ளன. 5860 வழக்குகளுக்குதீர்வுகாணப்பட்டு, ரூ.18.59 கோடி குத்தகை நிலுவைத் தொகை வசூலிக்க உத்தரவு பெறப்பட்டுள்ளன. ரூ.2.77 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில் நிலங்கள் குத்தகை தொடர்பாக வருவாய் நீதினற்ங்களில் நிலுவையாக உள்ள வழக்குளை விரைந்து முடித்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்து சமய திருக்கோயில்களுக்குச் சொந்தமான மனைகள் மற்றும் கட்டடங்களுக்கு நியாய வாடகை நிர்ணயம் செய்வதற்கு இந்துசமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி மண்டல இணை ஆணையர், திருக்கோயில் செயல் அலுவலர் / அறங்காவலர் / அறங்காவலர் குழுத்தலைவர், பதிவுத்துறையின் மாவட்டப்பதிவாளர் ஆகியோர் கொண்ட நியாய வாடகை நிர்ணய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநியாய வாடகை நிர்ணயக் குழுவின் மூலமாக திருக்கோயில்களுக்கு சொந்தமான வணிகம், குடியிருப்பு போன்ற பயன்பாடுகள் உள்ள மனைகள் மற்றும் கட்டடங்களுக்கு உரிய நியாய வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது.
திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு நியாய வாடகை நிர்ணயம் செய்வதிலும் வாடகை வசூல் செய்வதிலும் இடைக்காலத்தில் ஏற்பட்ட பின்னடைவினை நியாய வாடகை நிர்ணயக் குழுவின் மூலமாக விரைவில் சரி செய்து வருவாயை பெருக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்து சமய திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் நில உடைமைப்பதிவு மேம்பாட்டுத்திட்ட (U.D.R.) செயலாக்கத்தின் போது தனிப்பட்ட நபர்களின் பெயரில் தவறாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையை மாற்றி, மீண்டும் அந்தந்த திருக்கோயில்களின் பெயரிலேயே பட்டா பெறுவதற்காக மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இரு மாவட்ட வருவாய் அலுவலர்கள் தனி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்து சமய திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான வருவாய் துறை ஆவணங்களில் தவறாக பதியப்பட்டுள்ள விவரங்களை சரி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்துசமய திருக்கோயில்களுக்குச் சொந்தமான காலிமனைகளைக் குடியிருப்புக்காக கூட்டாக ஆக்கிரமித்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருபவர்களை கீழ்க்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு வாடகைதாரர்களாக வரன்முறைப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.