பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்காக முதல் முறையாக நான்கு கோடி ரூபாய் செலவில் கம்பிவட ஊர்தி அமைத்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டு 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் நாள் கம்பிவட ஊர்தி சேவை தொடங்கப்பட்டது. இந்தக் கம்பிவட ஊர்தி பக்தர்களின் வரவேற்பு பெற்றதையடுத்து, பழநி திருக்கோயிலுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது ஆணையின் படி சர்வதேசத் தரத்தில் மேலும் ஒரு கம்பிவட ஊர்தி அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சோளிங்கர் அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் மற்றும் கரூர் மாவட்டம் அய்யர்மலை அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் ஆகியவற்றுக்கு புதிதாக கம்பிவட ஊர்தி அமைத்திட ஒப்பந்தம் ஏற்படுத்தி நடவடிக்கையிலுள்ளது.
வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த திருக்கோயில்கள், ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் பாடிப் புகழப்பட்ட திருக்கோயில்கள், பிரார்த்தனை முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்கள், கிராமப்புறங்களில் அமைந்துள்ள சிறு திருக்கோயில்கள், ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளிலுள்ள சிறு சிறு திருக்கோயில்கள் ஆகிய பல்வேறு புணிதமான திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவற்றினை திருப்பணி செய்து புதுப்பிக்கும் பணி இன்றியமையாததாகும்.
இதனை கருத்தில் கொண்டு, கீழ் கண்ட நிதிகள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன:
இறை நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் சமய ஈடுபாடு கொண்டோர், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் மனமுவந்து அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டு பெரும்பாலான திருப்பணிகள் நடைபெறுகின்றன.
பல்வேறு திருக்கோயில்களின் திருப்பணி அவற்றின் நிதியிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.
நிதிவசதி மிக்க திருக்கோயில்களின் உபரிநிதியிலிருந்து, நிதி தேவையான திருக்கோயில்களுக்குத் திருப்பணிகளை மேற்கொள்ள இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் 36-வது பிரிவின் கீழ் நிதி மாற்றம் மூலமாக நிதியுதவி வழங்கப்படுகிறது.
அரசு மானியமாக ஆண்டுதோறும் திருக்கோயில்களின் திருப்பணிக்கென ஆறுகோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
ஆணையரின் பதவிப் பெயரில் `பொதுநல நிதி` என்ற நிதியம் தனிநபர்கள் தானாக முன் வந்து அளிக்கும் நன்கொடை மற்றும் இந்துசமய நிறுவனங்களின் பங்களிப்பு தொகை ஆகியவற்றைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு பொதுநல நிதி மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
நிதி வசதி மிகுந்த திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து திருக்கோயில்களின் மேம்பாட்டிற்காக எட்டு கோடி ரூபாய் பெற்று மூலநிதி ஏற்படுத்தப்பட்டது. இம்மூல நிதியிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையிலிருந்து தொன்மை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சிறு கிராமப்புறத்திருக்கோயில்களின் புனரமைப்புப் பணிக்கு நிதியுதவி வழங்கிட `கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணித் திட்டம்` என்ற திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கென பழநி, அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபரிநிதியிலிருந்து இரண்டு கோடி ரூபாய் நிதி மாற்றம் செய்து மூல நிதி ஏற்படுத்தப்பட்டது. இம்மூல நிதியிலிருந்து கிடைக்கும் வட்டியிலிருந்து திருக்கோயில் ஒன்றுக்கு ரூ.1,00,000/-வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
`முதலமைச்சர் திருக்கோயில் திருப்பணி மற்றும்பராமரிப்புநிதி` என்ற நிதியத்தினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 05.08.1991-ல் உருவாக்கினார். இந்நிதி அமைப்புக்குத் தமது சொந்த பணத்திலிருந்து ரூ.1,00,008/-ஐ நன்கொடையாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்தார்கள். இந்நிதிக்கு தொண்டுள்ளம் கொண்டோர், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் பெறப்பட்டன. இந்நிதியமைப்பு `திருக்கோயில் திருப்பணிமற்றும் அறப்பணிநிதி` என்று தற்போது அழைக்கப்படுகிறது. இந்நிதி மூலம் திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
பக்தர்கள் தாமே முன் வந்து தனது சொந்த செலவிலும், துறை மேற்பார்வையிலும் திருக்கோயில்களுக்குத் திருப்பணி செய்வது வழக்கத்திலுள்ளது.
தொன்மை வாய்ந்த திருக்கோயில்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பிக்க மத்திய அரசின் 12-வது நிதி ஆணையம் ரூ.9.87 கோடி நிதியுதவி வழங்கியது. இந்த நிதி மூலம் 46 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்யப்பட்டது. தொன்மை வாய்ந்த திருக்கோயில்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பிக்க மத்திய 13-வது நிதி ஆணையம் வழங்கிய ரூ.22,50 கோடி நிதியுதவி மூலம் 89 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்யப்பட்டு வருகிறது.
இந்து சமய அற நிலையத்துறை ஆளுகையில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள சிறு திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட நிதி மிகுந்த திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து நிதி பெறப்பட்டு திருக்கோயில் ஒன்றுக்கு ரூ.1,00,000/- வீதம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்து சமய அற நிலையத்துறை ஆளுகையில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள சிறு திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட நிதி மிகுந்த திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து நிதி பெறப்பட்டு திருக்கோயில் ஒன்றுக்கு ரூ.1,00,000/- வீதம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் ஆகம விதிப்படி ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். இதனடிப்படையில் திருக்கோயில்கள் கீழ்க்கண்டவாறு வகை செய்யப்பட்டு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தப்படுகின்றன:
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப் பெற்ற மற்றும் நாயன்மார்களால் பாடப்பெற்ற பழமை வாய்ந்த திருக்கோயில்கள்
வரலாற்றுப் புகழ் பெற்ற மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்கள்.
பிரார்த்தனை முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்கள்.
கிராமப்புறங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள சிறு திருக்கோயில்கள்.
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப் பெற்ற மற்றும் நாயன்மார்களால் பாடப்பெற்ற திருக்கோயில்கள் தமிழ் நாட்டில் பெருமளவில் உள்ளன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபின் இந்த திருக்கோயில்கள் மற்றும் 1006 திருக்கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மழைநீர் சேகரிப்புத் திட்டம், 2002-2003 ஆண்டில் மேதகு ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஒரு திட்டமாக திருக்கோயிலுக்கு சொந்தமான குளங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்துசமய அற நிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழுள்ள 46,195 திருக்கோயில்களில் 1586 திருக்கோயில்களுக்கு 2359 திருக்குளங்கள் உள்ளன.இவைகளில் 1291 திருக்குளங்கள் நல்ல நிலையில் உள்ளன, மீதமுள்ள 1068 திருக்குளங்கள் புனரமைப்பு செய்து மழைநீர் சேகரிக்க வேண்டிய நிலையில் இருந்தன. இத்திட்டத்தின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இவ்வரசு பொறுப்பேற்ற பின்னர் இத்திட்டத்தினை புதுப்பித்திட கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உற்சவமூர்த்தியை தங்க ரதத்திலோ, வெள்ளி ரதத்திலோ எழுந்தருளச் செய்து ரதம் இழுப்பது நீண்டகால வழக்கத்தில் உள்ளது. தற்போது கீழ்க்காணும் 63 திருக்கோயில்களில் தங்கரதமும் 49 திருக்கோயில்களில் வெள்ளிரதமும் பயன்பாட்டில் உள்ளன.
1 | TM035671 | அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் - 623526 | இராமநாதபுரம் |
2 | TM010229 | அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில், Pariyur, Gobichettipalayam - 638476 | ஈரோடு |
3 | TM010234 | அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், Thindal - 638012 | ஈரோடு |
4 | TM010245 | அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி - 638401 | ஈரோடு |
5 | TM010247 | அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில், பச்சைமலை, Modachur, Gobichettaipalayam - 638476 | ஈரோடு |
6 | TM025369 | அருள்மிகு மாரியம்மன் வகையறா திருக்கோயில், Karur - 639001 | கரூர் |
7 | TM038360 | அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில், Kanyakumari - 629702 | கன்னியாகுமரி |
8 | TM001649 | அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு - 600122 | காஞ்சிபுரம் |
9 | TM001701 | அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502 | காஞ்சிபுரம் |
10 | TM001731 | சங்கர மடம், காஞ்சிபுரம் - 631502 | காஞ்சிபுரம் |
11 | TM001865 | ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தேவஸ்தானம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீ மடம் சமஸ்தானம், பெரிய காஞ்சிபுரம், காஞ்சிபுரம் - 631502 | காஞ்சிபுரம் |
12 | TM004921 | அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில், மலைக்கோவில், சென்னத்தூர் - 635109 | கிருஷ்ணகிரி |
13 | TM009759 | அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை - 642104 | கோயம்புத்தூர் |
14 | TM009761 | அருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி - 641021 | கோயம்புத்தூர் |
15 | TM009762 | அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை - 641046 | கோயம்புத்தூர் |
16 | TM009766 | அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், உப்பிலிபாளையம், கோவை - 641018 | கோயம்புத்தூர் |
17 | TM009767 | அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் - 641001 | கோயம்புத்தூர் |
18 | TM035703 | அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயில், மடப்புரம் - 630611 | சிவகங்கை |
19 | TM035708 | அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், Ariyakurichi - 630556 | சிவகங்கை |
20 | TM035787 | அருள்மிகு சண்முகநாதப்பெருமாள் திருக்கோயில், Kundrakudi - 630206 | சிவகங்கை |
21 | TM035979 | அருள்மிகு கண்ணுடையநாயகிஅம்மன் திருக்கோயில், Nattarasankottai - 630556 | சிவகங்கை |
22 | TM001734 | அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர் - 603110 | செங்கல்பட்டு |
23 | TM000001 | அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004 | சென்னை |
24 | TM000006 | அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை - 600026 | சென்னை |
25 | TM000017 | அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன்(ம)திருவள்ளுவர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004 | சென்னை |
26 | TM000081 | அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை - 600019 | சென்னை |
27 | TM000087 | அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை - 600041 | சென்னை |
28 | TM000388 | அருள்மிகு கந்தசாமி (எ) முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், பூங்கா நகர், சென்னை - 600003 | சென்னை |
29 | TM000412 | ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயில், காந்திநகர், சென்னை - 600020 | சென்னை |
30 | TM000523 | அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை - 600090 | சென்னை |
31 | TM004858 | அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில், மேட்டு அக்ரஹாரம், சேலம் - 636001 | சேலம் |
32 | TM004861 | அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், Town Bus Stand, Salem - 636001 | சேலம் |
33 | TM004883 | அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் மற்றும் அஷ்டபுஜ பால மதன வேணுகோபாலசுவாமி திருக்கோயில், பேளூர் - 636104 | சேலம் |
34 | TM004966 | அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், கல்வடங்கம், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் - 637104 | சேலம் |
35 | TM017995 | அருள்மிகு வேங்கடாஜலபதி சுவாமி திருக்கோயில், ஒப்பிலியப்பன் கோயில், திருநாகேஸ்வரம், கும்பகோணம் வட்டம் - 612204 | தஞ்சாவூர் |
36 | TM018002 | அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, கும்பகோணம் - 612302 | தஞ்சாவூர் |
37 | TM018013 | அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், பட்டீஸ்வரம், பட்டீஸ்வரம் - 612703 | தஞ்சாவூர் |
38 | TM032151 | அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் - 624001 | திண்டுக்கல் |
39 | TM032203 | அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி - 624601 | திண்டுக்கல் |
40 | TM025704 | அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் - 621112 | திருச்சிராப்பள்ளி |
41 | TM025706 | அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருச்சிராப்பள்ளி - 620005 | திருச்சிராப்பள்ளி |
42 | TM025708 | அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சிராப்பள்ளி - 620003 | திருச்சிராப்பள்ளி |
43 | TM037881 | அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி நகர் - 627006 | திருநெல்வேலி |
44 | TM038069 | அருள்மிகு வானமாமலை பெருமாள் திருக்கோயில், - 627108 | திருநெல்வேலி |
45 | TM010054 | அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயம், சிவன்மலை - 638701 | திருப்பூர் |
46 | TM010079 | அருள்மிகு வஞ்சியம்மன் திருக்கோயில், Mulanur, Tirupur - 638106 | திருப்பூர் |
47 | TM020343 | அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை - 606601 | திருவண்ணாமலை |
48 | TM001506 | அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மலைக்கோயில், திருத்தணி - 631209 | திருவள்ளூர் |
49 | TM001646 | அருள்மிகு தேவிகருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு - 600077 | திருவள்ளூர் |
50 | TM038271 | அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - 628215 | தூத்துக்குடி |
51 | TM037836 | அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி - 627807 | தென்காசி |
52 | TM037875 | அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில், சங்கரன்கோயில் - 627756 | தென்காசி |
53 | TM014604 | அருள்மிகு சௌந்தராஜபெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் - 611001 | நாகப்பட்டினம் |
54 | TM004888 | அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில், நாமக்கல் - 637001 | நாமக்கல் |
55 | TM004890 | அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், மலைக்கோயில், திருச்செங்கோடு - 637211 | நாமக்கல் |
56 | TM004990 | அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், மெட்டாலா கணவாய், மூலபள்ளிப்பட்டி - 637406 | நாமக்கல் |
57 | TM025500 | அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவப்பூர், புதுக்கோட்டை வட்டம் - 622002 | புதுக்கோட்டை |
58 | TM025213 | அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், Siruvachur - 621113 | பெரம்பலூர் |
59 | TM031962 | அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை, மதுரை - 625001 | மதுரை |
60 | TM031985 | அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் - 625005 | மதுரை |
61 | TM032066 | அருள்மிகு பூங்காமுருகன் திருக்கோயில், மதுரை - 625002 | மதுரை |
62 | TM032124 | அருள்மிகு முருகன் திருக்கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில் - 625301 | மதுரை |
63 | TM018030 | அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில், வைதீஸ்வரன்கோயில் - 609117 | மயிலாடுதுறை |
64 | TM018083 | அருள்மிகு ஆமருவிப்பெருமாள் திருக்கோயில், தேரழுந்தூர், Therazhuthur - 609808 | மயிலாடுதுறை |
65 | TM001358 | அருள்மிகு சுப்பிரமணியசுவாமி என்கிற பாலமுருகன் திருக்கோயில், இரத்தினகிரி, கீழ்மின்னல் - 632517 | ராணிப்பேட்டை |
66 | TM001502 | அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர் - 631102 | ராணிப்பேட்டை |
67 | TM035740 | அருள்மிகு நாச்சியார்(ஆண்டாள்) திருக்கோயில், திருவில்லிபுத்தூர் - 626125 | விருதுநகர் |
68 | TM035747 | அருள்மிகு கருநெல்லிநாதசுவாமி திருக்கோயில், Thiruthangal - 626130 | விருதுநகர் |
69 | TM035757 | அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில், சிவகாசி, சிவகாசி நகர் - 626123 | விருதுநகர் |
70 | TM035878 | அருள்மிகு பராசக்திமாரியம்மன் வகையறா திருக்கோயில், Virudhunagar - 626001 | விருதுநகர் |
71 | TM036162 | அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மேலதொட்டியபட்டி, மேலதொட்டியபட்டி - 626125 | விருதுநகர் |
72 | TM020342 | அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர், மேல்மலையனூர் - 604204 | விழுப்புரம் |
1 | TM035671 | அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் - 623526 | இராமநாதபுரம் |
2 | TM035928 | அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில், உப்பூர் - 623525 | இராமநாதபுரம் |
3 | TM010224 | அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி, ஈரோடு - 638301 | ஈரோடு |
4 | TM010225 | அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில், பவானி, ஈரோடு - 638301 | ஈரோடு |
5 | TM010238 | அருள்மிகு ஆருத்ரகபாலீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு நகர், Erode - 638001 | ஈரோடு |
6 | TM020365 | அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர் - 606003 | கடலூர் |
7 | TM020366 | அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர், கடலூர் - 607002 | கடலூர் |
8 | TM042894 | அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், நெய்வேலி - 607801 | கடலூர் |
9 | TM001660 | அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில், அன்னை இந்திரா காந்தி சாலை, காஞ்சிபுரம் - 631501 | காஞ்சிபுரம் |
10 | TM001701 | அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502 | காஞ்சிபுரம் |
11 | TM001808 | அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், உத்திரமேரூர் - 603406 | காஞ்சிபுரம் |
12 | TM001816 | அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502 | காஞ்சிபுரம் |
13 | TM001865 | ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தேவஸ்தானம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீ மடம் சமஸ்தானம், பெரிய காஞ்சிபுரம், காஞ்சிபுரம் - 631502 | காஞ்சிபுரம் |
14 | TM009772 | அருள்மிகு மாரியம்மன், அங்காளம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி - 642001 | கோயம்புத்தூர் |
15 | TM035725 | அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், Meenakshipuram, Karaikudi - 630001 | சிவகங்கை |
16 | TM035733 | அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில், Ariyakkudi - 630202 | சிவகங்கை |
17 | TM035787 | அருள்மிகு சண்முகநாதப்பெருமாள் திருக்கோயில், Kundrakudi - 630206 | சிவகங்கை |
18 | TM035789 | அருள்மிகு மங்கைபாகநாதசுவாமி திருக்கோயில், Piranmalai - 630502 | சிவகங்கை |
19 | TM035794 | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், Keelaseevalpatti - 630205 | சிவகங்கை |
20 | TM035796 | அருள்மிகு வளரொளீஸ்வரர் என்ற வைரவசாமி திருக்கோயில், Vairavanpatti - 630212 | சிவகங்கை |
21 | TM035810 | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற நகர சிவன் கோயில், Karaikudi - 630001 | சிவகங்கை |
22 | TM035821 | Arulmigu Meenakshi Sundareshwarar Temple, Devakottai - 630302 | சிவகங்கை |
23 | TM035979 | அருள்மிகு கண்ணுடையநாயகிஅம்மன் திருக்கோயில், Nattarasankottai - 630556 | சிவகங்கை |
24 | TM036092 | அருள்மிகு சேவுகப்பெருமாள்அய்யனார் திருக்கோயில், Singampunari - 630502 | சிவகங்கை |
25 | TM000169 | சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், பூங்கா நகர், சென்னை - 600003 | சென்னை |
26 | TM000350 | அருள்மிகு சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம், மண்ணடி, சென்னை - 600001 | சென்னை |
27 | TM000388 | அருள்மிகு கந்தசாமி (எ) முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், பூங்கா நகர், சென்னை - 600003 | சென்னை |
28 | TM000492 | அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை - 600015 | சென்னை |
29 | TM004935 | அருள்மிகு கன்னிகாபரமேஸ்வரியம்மன் திருக்கோயில், சேலம் - 636001 | சேலம் |
30 | TM018002 | அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, கும்பகோணம் - 612302 | தஞ்சாவூர் |
31 | TM018015 | அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில், திருவிடைமருத்தூர், திருவிடைமருத்தூர் - 612104 | தஞ்சாவூர் |
32 | TM018019 | அருள்மிகு ஆதிகும்பேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம், Kumbakonam - 612001 | தஞ்சாவூர் |
33 | TM018037 | அருள்மிகு கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோயில், Thirubhuvanam - 612103 | தஞ்சாவூர் |
34 | TM014390 | அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், கோவில்கந்தன்குடி - 609608 | தி௫வாரூர் |
35 | TM032150 | அருள்மிகு சௌந்தரராஜபெருமாள் திருக்கோயில், தாடிகொம்பு, திண்டுக்கல் - 624709 | திண்டுக்கல் |
36 | TM032203 | அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி - 624601 | திண்டுக்கல் |
37 | TM025843 | அருள்மிகு மதுரை காளியம்மன் திருக்கோயில், தொட்டியம் - 621215 | திருச்சிராப்பள்ளி |
38 | TM010074 | அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், Udumalpettai, Udumalpettai - 642126 | திருப்பூர் |
39 | TM020343 | அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை - 606601 | திருவண்ணாமலை |
40 | TM020430 | அருள்மிகு வேதபுரிஸ்வரர் திருக்கோயில், திருவத்திபுரம், செய்யாறு - 604407 | திருவண்ணாமலை |
41 | TM001506 | அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மலைக்கோயில், திருத்தணி - 631209 | திருவள்ளூர் |
42 | TM001646 | அருள்மிகு தேவிகருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு - 600077 | திருவள்ளூர் |
43 | TM038271 | அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - 628215 | தூத்துக்குடி |
44 | TM038631 | Arulmigu Balasubramaniya Swami Temple, Aykudi - 627852 | தென்காசி |
45 | TM014571 | அருள்மிகு நவநீதேஸ்வரசுவாமி திருக்கோயில், சிக்கல், சிக்கல் - 611108 | நாகப்பட்டினம் |
46 | TM014581 | அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், எட்டுக்குடி, எட்டுக்குடி - 610204 | நாகப்பட்டினம் |
47 | TM025405 | அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர் - 622401 | புதுக்கோட்டை |
48 | TM025497 | அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை வட்டம் - 622002 | புதுக்கோட்டை |
49 | TM025691 | அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், விராலிமலை மற்றும் வட்டம் - 621316 | புதுக்கோட்டை |
50 | TM025225 | அருள்மிகு ஏகாம்பரேஸ்சுவரர் மற்றும் தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், Chettikulam - 621104 | பெரம்பலூர் |
51 | TM031962 | அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை, மதுரை - 625001 | மதுரை |
52 | TM018030 | அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில், வைதீஸ்வரன்கோயில் - 609117 | மயிலாடுதுறை |
53 | TM018031 | அருள்மிகு சட்டநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி - 609110 | மயிலாடுதுறை |
54 | TM018034 | அருள்மிகு மயூரநாதர் சுவாமி திருக்கோயில், Mayiladuthurai - 609001 | மயிலாடுதுறை |
55 | TM018041 | அருள்மிகு பரிமளரெங்கநாதர் திருக்கோயில், திருஇந்தளூர், மயிலாடுதுறை - 609001 | மயிலாடுதுறை |
56 | TM022597 | ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடம், மயிலம் - 604304 | விழுப்புரம் |
57 | TM001331 | அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில், தோட்டப்பாளையம், வேலூர் - 632004 | வேலூர் |
இந்து சமய அற நிலையத்துறையின் கீழுள்ள திருக்கோயில்களில் 809 திருக்கோயில்களுக்குச் சொந்தமாக 989 மரதிருத்தேர்கள் உள்ளன. 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில், நிதிவசதி மிக்க திருக்கோயில்களின் உபரிநிதி மூலம் திருத்தேர்கள் திருப்பணிக்காக (பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல்) ரூ.10.50 கோடி நிதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிதியிலிருந்து 91 திருத்தேர்கள் புதுப்பிக்கப்பட்டது. தற்போது, 686 திருத்தேர்கள் நல்ல நிலையில் உள்ளன. மீதமுள்ள 303 திருத்தேர்களில் 25 திருத்தேர்களின் திருப்பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 278 திருத்தேர்கள் திருப்பணி செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருத்தேர்களைப் பாதுகாக்கும் பொருட்டு தீப்பிடிக்காத தகடுகளால் ஆன தேர்கொட்டகை, இரும்பு அச்சு, இரும்புச்சக்கரம் ஆகியவற்றைச் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட தேரோட்ட விழாக்களை நடத்தவும் திருத்தேர்களை பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருக்கோயில்களின் திருப்பணிகளை மேற்கொள்வதற்கான மதிப்பீடுகள் தயாரித்தளிப்பதில் தாமதம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, பொதுப்பணித்துறையிலும் நெடுஞ்சாலைத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர்கள் பட்டயப் பொறியாளர்கள் அங்கீரிகரிக்கப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட பட்டயப் பொறியாளர்கள் மூலமாக திருக்கோயில்களைச் சீரமைப்பதற்குரிய கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான வரை படங்கள், மதிப்பீடுகள் தயார் செய்யவும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிற்ப சாத்திர மற்றும் ஆகம சாத்திர விதிகளில் வரையறுக்கப்பட்டபடி திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தம் முன்னோர் மூலம் வழி வழியாக இக்கலையை நன்கு கற்றறிந்தோர், சிற்ப சாத்திரக் கலையில் பட்டம் அல்லது பட்டயம் பெற்றுள்ளோர் ஆகியோர் ஸ்தபதிகளாக அங்கீகாரம் செய்யப்படுகின்றனர்.