அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், வேலுடையான்பட்டு, நெய்வேலி - 607801, கடலூர் .
Arulmigu Neyveli Group Temple, Veludaiyan Pattu, Neyveli - 607801, Cuddalore District [TM020370]
×
Temple History
தல பெருமை
திருக்கோயிலின் சிறப்பம்சம்
கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரத்தையொட்டி அமைந்துள்ள வில்லுடையான்பட்டி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகனை சிவசுப்ரமணிய சுவாமி என்றழைக்கின்றனர். இத்திருக்கோயில் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. வில்லுடையான்பட்டிற்குரிய சிறப்பானது இத்திருக்கோயிலில் ஸ்ரீமுருகப்பெருமான் கையில் வில்லும், அம்பும் உடையவராய் இடுப்பில் சல்லடத்துடன் வள்ளி, தெய்வானை பக்கத்தில் நிற்க சுயம்புவாய் காட்சி அளித்து அருள்பாலிக்கிறார். முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள இந்தக் காட்சி வேறு எங்கும் காணக்கிடைக்காத ஒன்றாகும். இக்கோயிலின் தல விருட்சம் வன்னிமரம்.
உற்சவ மூர்த்திகள்
1.திருக்கரங்களில் வில்லும் அம்பும் கொண்டு விரிந்த சடையுடன் வேடர் கோலத்தில் வள்ளி தெய்வானையோடு மிக அற்புதமாய் நிற்கிறார்.
திருவிழாக்கள்
இக்கோயிலில் வருடாவருடம் பங்குனி உத்திர பெருவிழா 12 நாட்களுக்கு வெகுவிமரிசையாக நடைபெறும், அதுமட்டுமின்றி கந்தசஷ்டி திருவிழா, கார்த்திகை தீபத் திருவிழா, கிருத்திகை,...திருக்கோயிலின் சிறப்பம்சம்
கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரத்தையொட்டி அமைந்துள்ள வில்லுடையான்பட்டி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகனை சிவசுப்ரமணிய சுவாமி என்றழைக்கின்றனர். இத்திருக்கோயில் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. வில்லுடையான்பட்டிற்குரிய சிறப்பானது இத்திருக்கோயிலில் ஸ்ரீமுருகப்பெருமான் கையில் வில்லும், அம்பும் உடையவராய் இடுப்பில் சல்லடத்துடன் வள்ளி, தெய்வானை பக்கத்தில் நிற்க சுயம்புவாய் காட்சி அளித்து அருள்பாலிக்கிறார். முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள இந்தக் காட்சி வேறு எங்கும் காணக்கிடைக்காத ஒன்றாகும். இக்கோயிலின் தல விருட்சம் வன்னிமரம்.
உற்சவ மூர்த்திகள்
1.திருக்கரங்களில் வில்லும் அம்பும் கொண்டு விரிந்த சடையுடன் வேடர் கோலத்தில் வள்ளி தெய்வானையோடு மிக அற்புதமாய் நிற்கிறார்.
திருவிழாக்கள்
இக்கோயிலில் வருடாவருடம் பங்குனி உத்திர பெருவிழா 12 நாட்களுக்கு வெகுவிமரிசையாக நடைபெறும், அதுமட்டுமின்றி கந்தசஷ்டி திருவிழா, கார்த்திகை தீபத் திருவிழா, கிருத்திகை, ஜெயதுர்கா தேவி பூஜை, சிவராத்திரி போன்ற விழாக்களும் சிறப்பான முறையில் நடைபெறும்.
திருக்கோயில் நிர்வாகம்
நிர்வாக வசதிக்காக ஐந்து திருக்கோயில்களை ஒன்றிணைத்து, நெய்வேலி குழுக்கோயில்கள் என்ற ஒரே அமைப்பாக 1965-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு, என்.எல்.சி. இந்திய நிறுவனத்தால் நியமிக்கப்படுகின்ற அலுவலர்களால் நிர்வாக திட்டத்தின்படி நிர்வகிக்கப்படுகின்ற, இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்கு உட்பட்ட 46 சட்டப் பிரிவை சார்ந்ததாகும்.
இக்கோயிலானது நெய்வேலி குழுக்கோயில்களில் முதன்மையான திருக்கோயிலாகும்.