Screen Reader Access     A-AA+
அருள்மிகு மன்னார்சாமி சமேத பச்சையம்மன் திருக்கோயில், முணுகப்பட்டு - 604504, திருவண்ணாமலை .
Arulmigu Mannarswamy Samedha Pachiyamman Temple, Munugapattu - 604504, Tiruvannamalai District [TM020377]
×
Temple History

தல வரலாறு

சிவபெருமானின் தீவிர பக்தரான பிருங்கி முனிவர், சிவனைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் வணங்காதவர். ஒருசமயம் சிவனும், பார்வதியும் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் காட்சி தந்த வேளையில், அங்கு வந்த பிருங்கி முனிவர் வண்டு உருவம் கொண்டு, சிவபெருமானை மட்டும் வலம் வந்து வணங்கிச் சென்றார். இதைக் கண்டு மனம் வருந்திய பார்வதி, ஐயனே முற்றும் அறிந்த முனிவரே இப்படிச் செய்வது எந்த வகையில் நியாயம் இனியும் இப்படி நிகழாமல் இருக்க தங்களின் உடலில் சரி பாதியை எனக்குத் தந்தருளுங்கள், என்று ஈசனை வேண்டினார். அதற்குச் சிவபெருமான்உடனே செவிமடுக்கவில்லை. அன்னைக்கு ஒரு யோசனை தோன்றியது. கடும் தவம் இருந்தால், இவரிடம் வேண்டிய வரத்தினைப் பெறலாம் என்று முடிவு செய்து தவமிருக்கும் இடம் தேடி பூமிக்கு வந்தாள். அப்போது அன்னைக்குப்...