Screen Reader Access     A-AA+
அருள்மிகு திருவிக்ரமசுவாமி தேவஸ்தானம், திருக்கோவிலூர் நகர் மற்றும் வட்டம் - 605757, கள்ளக்குறிச்சி .
Arulmigu Thiruvikkaraswamy Temple, Thirukoilur - 605757, Kallakurichi District [TM020385]
×
Temple History

தல வரலாறு

வரலாற்றுப் பெருமைக்கு உரியதான இந்த நகரம் மேலூர், கீழுர் (கீழையூர்) என்னும் இரு பிரிவினதாயுள்ளது. திருக்கோவலூரில் மேற்குப்பகுதி மேலூராகும். இதுதான் நகரத்தின் இன்றியமையாப் பகுதி. இங்கே தான் திருவிக்கிரமப் பெருமாள் கோயில், கடைத்தெரு, உயர் நிலைப்பள்ளி முதலியவை உள்ளன. இங்கே உள்ள திருவிக்கிரமப் பெருமாள் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது முதலாழ்வார் மூவரும் சேர்ந்து வழிபட்டது. திருமங்கையாழ்வாரின் பாடல் (மங்களா சாசனம்) பெற்றது.