Arulmigu Veeravazhiamman Temple, Villupuram - 605602, Viluppuram District [TM020389]
×
Temple History
தல பெருமை
விழுப்புரம் நகரில், எம்.ஜி.ரோடு விழுப்புரம் -பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக அமைந்துள்ள .இத்திருக்கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு உட்பட்டதாகும். இத்திருக்கோயிலின் அருகாமையில் குடியிருந்த திரு.கிருச்ணமூர்த்தி மேஸ்திரி என்பவர் தற்போது திருக்கோயில் உள்ள இடத்தில் சுயம்பு வடிவில் அம்மன் எழுந்தருளிருந்தது கண்டு மேற்படி இடத்தில் திருக்கோயிலை எழுப்பி பராமரித்து வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது, மேலும் அந்தகாலத்தில்விழுப்புரம் நகரில் மாரியம்மன் திருக்கோயில் வேறெங்கும் இல்லாத காரணத்தினால் பெரியம்மை நோய் தாக்கியவர்கள். இத்திருக்கோயில் அமைந்திருந்த முன்மண்டபத்தில் படுத்திருந்து அம்மனை வழிபட்டு குணமடைந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்த வழி பட்டு செல்வதை வழக்கத்திற்கு கொண்டிருந்தனர். பின்னர் இத்திருக்கோயிலில் உள்ள அம்மன் அருள்மிகு வீரவாழியம்மன் என்ற பெயர்கொண்டு காவல் தெய்வமாக இரவு பகல் பாராது தன்னை நாடி...விழுப்புரம் நகரில், எம்.ஜி.ரோடு விழுப்புரம் -பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக அமைந்துள்ள .இத்திருக்கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு உட்பட்டதாகும். இத்திருக்கோயிலின் அருகாமையில் குடியிருந்த திரு.கிருச்ணமூர்த்தி மேஸ்திரி என்பவர் தற்போது திருக்கோயில் உள்ள இடத்தில் சுயம்பு வடிவில் அம்மன் எழுந்தருளிருந்தது கண்டு மேற்படி இடத்தில் திருக்கோயிலை எழுப்பி பராமரித்து வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது, மேலும் அந்தகாலத்தில்விழுப்புரம் நகரில் மாரியம்மன் திருக்கோயில் வேறெங்கும் இல்லாத காரணத்தினால் பெரியம்மை நோய் தாக்கியவர்கள். இத்திருக்கோயில் அமைந்திருந்த முன்மண்டபத்தில் படுத்திருந்து அம்மனை வழிபட்டு குணமடைந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்த வழி பட்டு செல்வதை வழக்கத்திற்கு கொண்டிருந்தனர். பின்னர் இத்திருக்கோயிலில் உள்ள அம்மன் அருள்மிகு வீரவாழியம்மன் என்ற பெயர்கொண்டு காவல் தெய்வமாக இரவு பகல் பாராது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் மூலஸ்தானம் கதவுகள் திறந்தபடியே வைத்திருப்பது அன்றிலிருந்தே இன்று வரை பழக்கமாக உள்ளது. தற்போது இத்திருக்கோயிலின் ஸ்தாபதர் திரு.கிருச்ணசாமி மேஸ்திரி அவர்களின் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த திரு.ப.வேலவன் என்பவர் பரம்பரை அறங்காவலராக செயல் அலுவலருடன் இணைந்து நிர்வகிக்கப்படுகிறது.