Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், விழுப்புரம் - 605602, விழுப்புரம் .
Arulmigu Anjeneyarsamy Temple, Villupuram - 605602, Viluppuram District [TM020390]
×
Temple History

தல வரலாறு

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகரில் , திரு,வி.க.வீதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட திருக்கோயிலாகும், இத்திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயசுவாமியை மூலவராக பக்தர்கள் வழிபடுகின்றனர், இங்கு வந்து வழிபட்டால் தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஆற்காடு நவாப்பின் படைகள் பாண்டிச்சேரிக்கு செல்லும்போது இப்பகுதியில் உள்ள நவாப் தோப்பு (தற்போது நவ்வா தோப்பு என்று அழைக்கப்படுகிறது) பகுதியில் முகாம் அமைத்து தங்குவது வழக்கம் என்றும் அப்போது படைவீரர்கள் இத்திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயசுவாமியை வழிபட்டு செல்வார். இத்திருக்கோயிலில் கல்வெட்டுகள் எதுவும் இல்லை.