Screen Reader Access     A-AA+
அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில், வேளச்சேரி, சென்னை - 600042, சென்னை .
Arulmigu Selliamman Temple, Velachery, Chennai - 600042, Chennai District [TM000204]
×
Temple History

தல வரலாறு

தல வரலாறு அசுரன் ஒருவனை அழிக்கச்சென்ற சப்த மாதர்கள் தவறுதலாக ஒரு மகரிஷியை அழித்து விட்டனர். தன்னை அழிக்க தாய்மார்கள் எழுவர் புறப்பட்டிருக்கும் செய்தியை அந்த அசுரன் அறிந்து கொண்டான். முனிவரைக் கொன்ற தோஷம் ஒரு புறம், அசுரனின் மிரட்டல் மறுபுறமுமாக இருந்த வேளையில் சிவபெருமான் சப்தமாதர்கனள காக்க தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி வைத்தார். வீரபத்திரர் சப்தமாதர்களை காத்ததோடு, அசுரனையும் அழித்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி சப்தமாதர்களை அமைத்து அருகில் வீரபத்திரரை காவல் தெய்வமாக வைத்து வழிபடுகின் றனர். செல்லியம்மன் ஆலயத்தில் ஆதித்த கரிகாலனின் ஆட்சி காலத்தைச் சார்ந்த கல்வெட்டு ஒன்றும்,பல்லவர் வழி வந்த பார்த்திவேந்திரவர்மன் காலத்து கல்வெட்டு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.