Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, பண்ருட்டி - 607106, கடலூர் .
Arulmigu Veeratteshwarar Temple, Thiruvathigai, Panruti - 607106, Cuddalore District [TM020401]
×
Temple History

தல வரலாறு

வீரட்டானம்

தல பெருமை

சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.இவர் முதன்முதலில் தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்த தலம். ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம். அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம்.திலகவதியார் தன் தம்பியாகிய (அப்பர்) மருள்நீக்கியாரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் சூலை தந்து ஆட்கொள்வோம் என்று பதிலுறைத்த பதி. சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான், யாருமறியாமல் பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூர்) விட்டு நீங்கி, இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு, தொழுது, திருவாளன் திருநீறு தரப் பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று, உருவார அணிந்து, அவர்பின் சென்று, அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி,...

புராண பின்புலம்

அதிகாபுரி என்று அழைக்கப்பட்ட திருவதிகையில் கெடில நதியின் வடகரை ஓரத்தில் கிழக்கு நோக்கிய திருத்தலமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் அட்ட வீரட்டத்தலங்களில் மூன்றாவது வீரட்டமாக விளங்குகிறது. திரிபுரதகனம் நடைபெற்ற திருத்தலம். முன்னையிட்ட தீ முப்புரத்திலே பிள்னையிட்டதீ தென்னிலங்கையிலே என்று பட்டினத்தார் பாடியிருப்பதால் இராமாயண காலத்திற்கும் முதலிலேயே திரிபுரதகனம் நடைபெற்றுள்ளதை அறிய முடிகிறது. கிரதாயுகத்தில் தாருகாட்சன் கமலாட்சன் வித்துண்மாலி என்னும் அசுரர்கள் இருந்தனர் இவர்களுக்கு பொன் கோட்டை, வெள்ளிக்கோட்டை, இரும்புக்கோட்டை என்னும் மூன்று கோட்டைகள் உண்டு இவர்கள் எங்கு சென்றாலும் கோட்டை களுடனே விண்ணில் வலம் வருவர். இவர்கள் தேவர்கள் தலைவனான இந்திரனை சிறை பிடித்து மற்ற தேவர்களையெல்லாம் வென்று கொடுமை படுத்தினார்கள். அதனால் தேவர்கள் அனைவரும்...