Screen Reader Access     A-AA+
அருள்மிகு அய்யனார் திருக்கோயில், கொஞ்சிக்குப்பம் - 607103, கடலூர் .
Arulmigu Ayyanaar Temple, Konjikuppam - 607103, Cuddalore District [TM020403]
×
Temple History

தல பெருமை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொஞ்சிக்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஐயனார் விநாயகர் மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இது மிகவும் பழமைவாய்ந்த 100 ஆண்டுகட்கு முற்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் மக்கள் மதுபழக்கம் உள்ளவர்கள் மதுபழக்கத்தை மறக்க அருள்மிகு ஐயனாரை வேண்டி குடும்பநல பிரார்த்தனை சீட்டு கட்டி விட்டு கையில் கயறு கட்டிக் கொண்டால் மதுபழக்கதை நிறுத்தி விடுகிறார்கள்.குடும்பத்தில் சண்டை மற்றும் பொருட்கள் காணாமல் போனால் அருள்மிகு ஐயனாரை வேண்டி படிக்காசுசீட்டு கட்டினால் காணாமல் போன பொருட்கள் மீண்டும் கையில் கிடைக்கும் என்பது காலகாலமாக தொன்று தொட்டு வருகிறது.