Screen Reader Access     A-AA+
அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், சிங்கிரிகுடி - 605007, கடலூர் .
Arulmigu Lakshminarasimma Swamy Temple, Singirikudi - 605007, Cuddalore District [TM020410]
×
Temple History

தல பெருமை

இவ்ஊரின் பெயர் சிங்கர்கோயில் என நரசிம்மர் பெயராலேயே வழங்கப்படுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள மூலவர் நரசிங்கர் பதினாறு திருக்கைகளுடன் ஆச்சரியமாகக் காட்சியளிக்கிறார். இவரை தரிசித்தால் எல்லா வகைப் பாபங்களும் நீங்கும். வஸிஷ்டமாமுனிவர் இத்திருத்தலத்தில் நரசிங்கரை த்யானம் செய்துகொண்டு தவம்புரிந்து ஸித்தி பெற்றுத் தம்முடைய பாபங்பளைப் போக்கிக் கொண்டார். இந்த ஊரின் பெயர் சிங்கர்கோயில். புராணப்பெயர் கிருஷ்ணாரண்யக்ஷேத்ரம். தாயார் பெயர் கனகவல்லித்தாயார். விமானத்தின் பெயர் பாவன விமானம். இங்குள்ள தீர்த்தங்கள் ஜமதக்னிதீர்த்தம், இந்திரதீர்த்தம், வாமனதீர்த்தம், கருடதீர்த்தம் என ஐந்து. மூலமூர்த்திக்குக் கீழே இடதுபுறம் இரணியனின் மனைவியான நீலாவதி, கீழே வலதுபுறம் மூன்று அசுர்ர்கள் ப்ரஹ்லாதர், சுக்ரர் வஸிஷ்டர் ஆகியவர்கள் இருக்கிறார்கள். வடக்கு நோக்கியவர்களாகச் சிறிய வடிவில் யோகநரசிம்மர், பாலநரசிம்மர் என இருவர் இருக்கிறார்கள். இவ்வாலயத்தில் வைகானஸ ஆகம...