Screen Reader Access     A-AA+
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் - 607002, கடலூர் .
Arulmigu Varadharaja Perumal Temple, Thirupathiripuliyur, Cuddalore - 607002, Cuddalore District [TM020421]
×
Temple History

தல வரலாறு

திருக்கோவிலூர் தேகளீச பெருமாளின் அபிமான தலம். கருட ஸ்தலம்

தல பெருமை

ஒருவில் ஒருசெல் ஓரில் உலகினில் என்று காட்டக் கருவில் கருவாய்த் தோன்றிக் கோசலை வயிறு தித்தே உருவில் உயிராய் மற்றெம் உடலாய் விளங்கி நிற்கும் திருப்பாப்புலியூர் வரதராஜப்பெருமாள் போற்றி....... வைணவ சமயத்தில் எம்பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கின்ற நிலைமைகளை ஐந்து வகையாகப்பகுத்துக் கூறுவர், அவற்றைப் பரம் என்பது எம்பெருமான் வைகுந்தத்தில் வாசம் செய்வதையும், வியூகம் என்பது திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டு அருள் சுரக்கப் பல திருநாமங்களுடன் விளங்கி வருவதையும், மண்ணுலகில் பற்பல அவதாரங்கள் எடுத்ததை விபவம் என்றும் நம் உள்ளத்தே எழுந்தருளி இருப்பதை அந்தர்யாமி என்றும் எல்லாத் திருக்கோயில்களிலும் எழுந்தருளி இருப்பதை அர்ச்சை என்றும் கூறுவர். இவற்றில் பக்தர்கள் எந்த இடத்திலும் எல்லாக் காலத்திலும் வந்து சேவித்து அருள் வேண்டி நிற்குமாறு குடிகொண்டுள்ள அர்ச்சை நிலையே நாம் கண்டு...