Arulmigu Kotteeswarar Temple, Peruvalur - 604208, Viluppuram District [TM020442]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயில், பெருவளுர், மேல்மலையனுர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
இறைவன் கோட்டீஸ்வரர்
இறைவி கோகிலாம்பாள்
தல விருட்சம் மகிழ மரம்
திருக்கோயில் அமைவிடம்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுர் வட்டம், பெருவளுர் என்னும் தலம் செஞ்சியிலிருந்து சேத்பட் செல்லும் சாலையில் வடக்கே 10 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக 155 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
பெயர்க்காரணம்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுர் வட்டம், பெருவளுர் என்னும் ஊரில் அருள்மிகு கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோடி சிவன் கோயில்களில் ஒன்றானதாகவும், முற்காலத்தில் ஒரு கோடி தீபங்கள் ஏற்றப்பட்ட இடம்...அருள்மிகு கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயில், பெருவளுர், மேல்மலையனுர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுர் வட்டம், பெருவளுர் என்னும் ஊரில் அருள்மிகு கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோடி சிவன் கோயில்களில் ஒன்றானதாகவும், முற்காலத்தில் ஒரு கோடி தீபங்கள் ஏற்றப்பட்ட இடம் என்பதாலும் கோட்டீஸ்வரர் திருக்கோயில் என பெயர் பெற்றது.
தன் பன்னிரெண்டு வயதிற்குள்ளாகவே நாட்டின் பல பகுதிகளலும் தீப மகிமையைப் பரப்பி வந்த தீபரட்சகர் எனும் சித்தர்பிரான், இறையாணையாய் திருவண்ணாமலைத் தலத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். இச்சித்தர்பிரானே நாடெங்கும் எட்டுத் திக்குகளிலும் ஒரு கோடி தீபங்களுக்கு மேல் ஏற்றிக் கண்ணார தரிசித்தவரும் ஆவார். இடையில் இறைவன் தீபரட்சகரை அருளுடன் அரவணைக்கும் திருவிளையாடலும் நிகழ்ந்தது. அள் என்றால் தீபம், அக்னி என்றால் நெருப்பு, ஊர் என்றால் தொடர்ந்து ஜீவிப்பது என்று பொருள். பெருவள்ளுர் என்றால் இவ்வகையில் எப்போதுமே பெரிய தீபங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற பெருமையை உடைய ஊர் என்றும் பொருளாகும்.
ஆலய விமானத்தை விட மிகவும் உயரமாக உள்ள துவஜ ஸ்தம்பத்தில் இருந்து எழுகின்ற தீபம் கோகில ஜோதி என்பதாகும். இந்த தீபமானது மகிழம் பூவின் பிரகாசத்தைக் கொண்டது. இவ்வாறு விசேஷமானதாகவும், மகிழ மரத்தின் கீழ் ஏற்றப்பெறும் தீபத்தை த்வஜ ஸ்தம்பத்தின் அருகில் எடுத்துச்சென்று அதே உயரத்திற்கு ஒரு தீப்பந்தத்தை பிடித்து காலையிலும், மாலையிலும் சூரிய வணக்கத்தைச் செலுத்துகின்ற கோகில ஜோதி வழிபாட்டை தீபரட்சகர் தான் பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இந்த சிவத்தலத்தில் ஏற்றி தொடங்கி வைத்தார்.
தனிச்சிறப்பு
இந்த கோகில ஜோதி தென்படும் தலங்களுள் ஒன்றாக விளங்குகின்ற பெருவளுர் தலத்தில் இறைவன் கோட்டீஸ்வரராகவும், அம்பிகை கோகிலாம்பாளாகவும் வேண்டியவருக்கு வேண்டிய வரம் அளித்து, கோடி மடங்கு பலன்களை அருள வல்ல தலமாக அருள்பாலித்து வருகின்றனர்.
ஒரே சமயத்தில் இருந்த இடத்திலிருந்தே அனைத்து மக்களும் ஒரு கோடி தீபங்களையும் தரிசிக்கும் வண்ணம் கொடிக் கம்ப உயர அளவிற்கு விளக்குச் சரங்கள் கட்டப்பட்டு, தீப தரிசனத்தை பெற்றார்கள். இத்தலத்திலே தீபத்தை ஏற்றி கோட்டீஸ்வராய நம என்று பக்தியாக வேண்டினால் நல்ல பலன்களை தரக்கூடிய தலமாகும்.
உப சன்னதிகள்
விநாயகர் சன்னதி, ஆறுமுகர் சன்னதி, ஐயப்பன் சன்னதி, நவக்கிரக சன்னதி ஆகிய நான்கு சன்னதிகள் அமைந்துள்ளன.
நிர்வாகம்
இத்திருக்கோயில் சட்டப்பிரிவு 46 ன் கீழ் அறிவிப்பு செய்யப்பட்ட பட்டியலைச் சேர்ந்த திருக்கோயிலாகவும், மேல்மலையனுர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலின் குழுக்கோயிலாகவும் உள்ளதால், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலின் உதவிஆணையர் /செயல்அலுவலராலும், செஞ்சி பிரிவு ஆய்வர் தக்காராகவும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
முக்கிய திருவிழாக்கள்
பிரதி மாத வளர்பிறை, தேய்பிறை பிரதோஷம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்த சஷ்டி விழா, மாசி மாத பிரம்மோற்சவம், மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திர விழா ஆகியவை.
நடை திறந்திருக்கும் நேரம்
நேரம்காலபூஜை
காலை 6.00 மணிஉஷக்காலம்
மாலை 4.30 மணிசாயரட்சை
விசேஷ நாட்களில் நாள் முழுவதும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.
போக்குவரத்து வசதி
செஞ்சியிலிருந்து பேருந்துகள் உள்ளன. சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக செஞ்சி சேத்பட் சாலையில் நேரடி பேருந்து வசதியும் உண்டு. வளத்தியிலிருந்து ஆட்டோ வசதியும் உள்ளது.
இலக்கிய பின்புலம்

நேரம் காலபூஜை
காலை 6.00 மணி உஷக்காலம்
மாலை 4.30 மணி சாயரட்சை