Arulmigu Arasalieswarar Temple, Ozhundhiyampattu - 605109, Viluppuram District [TM020538]
×
Temple History
தல பெருமை
வேங்கியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட சத்தியவிரதன் என்ற மன்னன் சிவநெறி தழைத்தோங்க அரசு புரிந்து வந்தான் ,நகர் வலமாக திரு அரசிலி வந்தடைந்த மன்னன் சில நாள் இத்திருத்தலத்தில் தங்கி இறைவன் பூசைக்கு என நந்தவனம் அமைத்துப் பராமரித்து வந்தான். அந்த நந்தவனத்தில் பூச்செடி , தளிர்கள். அ ன்று பூத்த மலர்கள் அனைத்தையும் மான் ஒன்று பிறர் அறியா வண்ணம் தின்று வந்தது. பூசைக்குரிய மலர்கள் போதுமான அளவு கிடைக்காததை அறிந்த மன்னன் காவலர்களை ஏவி நந்தவனத்தைக் கண்காணிக்கச் செய்தான்,
அப்பொழுது மான் ஆக வந்த இறைவன் வழக்கம் போல மலர்களையும், தளிர்களையும் உட்கொள்வதைக் கண்ட காவலர்கள் மன்னனிடம் தெரிவிக்க மன்னன் அதனை விரட்ட அம்மான் ஒரு புதரில் மறையவும்...வேங்கியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட சத்தியவிரதன் என்ற மன்னன் சிவநெறி தழைத்தோங்க அரசு புரிந்து வந்தான் ,நகர் வலமாக திரு அரசிலி வந்தடைந்த மன்னன் சில நாள் இத்திருத்தலத்தில் தங்கி இறைவன் பூசைக்கு என நந்தவனம் அமைத்துப் பராமரித்து வந்தான். அந்த நந்தவனத்தில் பூச்செடி , தளிர்கள். அ ன்று பூத்த மலர்கள் அனைத்தையும் மான் ஒன்று பிறர் அறியா வண்ணம் தின்று வந்தது. பூசைக்குரிய மலர்கள் போதுமான அளவு கிடைக்காததை அறிந்த மன்னன் காவலர்களை ஏவி நந்தவனத்தைக் கண்காணிக்கச் செய்தான்,
அப்பொழுது மான் ஆக வந்த இறைவன் வழக்கம் போல மலர்களையும், தளிர்களையும் உட்கொள்வதைக் கண்ட காவலர்கள் மன்னனிடம் தெரிவிக்க மன்னன் அதனை விரட்ட அம்மான் ஒரு புதரில் மறையவும் மீண்டும் வேடன் போல் வெளிப்பட்டுச் சத்திய விரதனோடு விற்போர், மற்போர் செய்ய முற்பட்டுப் பின் அரசடிப் புதரில் சென்று மறைந்தார், மன்னன் மருண்டு மானாக, வேடனாக வந்தவர் இறைவனே என்பதை உணர்ந்து புதரினுள் உற்று நோக்குகையில் அங்கே லிங்கம் வெளிப்படக் கண்டு உடனே அச்சுயம்பு முர்த்திக்கு நெற்றியில் பட்டம் சூட்டி அவ்விடத்திலேயே பிரதிட்டையும் செய்வித்தான். அக்காலம் பிரதோஷ காலமாக இருந்ததனால் இத்திருத்தலத்திற்குப் பிரதோஷத் திருத்தலம் எனவும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ராகு கிரக தோஷம் நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது