Screen Reader Access     A-AA+
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், எலவனாசூர்கோட்டை - 607202, கள்ளக்குறிச்சி .
Arulmigu Arthanaeeswarar Temple, Elavanasoorkottai - 607202, Kallakurichi District [TM020546]
×
Temple History

தல வரலாறு

சிவபெருமானின் கட்டளைப்படி தெய்வீக மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம் கோவில் கோபுரத்தின் பின்புறம் உள்ள தண்ட தீர்த்தத்திலே நீராடி, பிதிர்களை நினைத்து அந்தக்கரையிலிருந்து சிரார்த்தம் முதலாகிய கர்மங்களை நிறைவேற்றினவர்கள். பிரம்மாவினுடைய உலகத்தையடைவார்கள். அன்றி, பூவுலகத்தில் எவ்விடமிருந்து மகிழ்ச்சியுடன் அதனை நினைத்தாலும் பிறப்பினை அறுக்கும்.பாத்திரத்தில் அந்நீரை எடுத்துக்கொண்டு நடந்தால் நடந்த அடி ஒன்றுக்கு ஒரு யாகம் செய்த பலன் உண்டாகும். தண்டத் தீர்த்தத்தில் நீராடினால் நமது கர்மாக்கள் தீர்ந்து புது ஜென்மம் எடுத்தது போல வாழலாம் என்பது உண்மை.

தல பெருமை

விழுப்புரம் மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமையான ஸ்ரீபிரஹன்நாயகி சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. முதலாம் ராஜராஜன் காலத்தை சேர்ந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. இறைவாசநல்லூர் என்பதே காலப்போக்கில் மாறி எலவனாசூர் என்றும் தற்போது எலவனாசூர்கோட்டை எனவும் அழைக்கப்படுகிறது. சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள், சிற்றரசர்கள் பலரும் கோயில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இந்த கோயில் மாடக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. யானை ஏற முடியாத மேடை பகுதியை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டுள்ளது. கோயிலின் முகப்பு பகுதியில் உள்ள ராஜகோபுரம் ஆறு அடுக்குகளை கொண்டது. அதன் அருகில் நூறுகால் மண்டபமும், கட்டுமான பணிகள் அனைத்தும் கீழ் பகுதியில் கருங்கல் கொண்டும், மேல் பகுதி செங்கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. சிவன்கோயில்கள் மூலவர் கிழக்கு நோக்கியபடியே...