Screen Reader Access     A-AA+
அருள்மிகு மகான் படேசாயுபு திருக்கோயில், சின்னபாபு சமுத்திரம் - 605102, விழுப்புரம் .
Arulmigu Padasayub Temple, Chinnababu Samuthiram - 605102, Viluppuram District [TM020581]
×
Temple History

இலக்கிய பின்புலம்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மத ஒருமைப்பாட்டைக் காக்கும் சித்த புருஷரே ஸ்ரீ படேசாகிப் ஆவார். நோயாளிகளுக்கு விபூதி கொடுத்தே நோய்களைப் பறந்தோடச் செய்தார். இமயமலையின் அடிவாரத்தில் சுமார் 2000 அடி கீழே புதைத்திருந்த நிஷ்டதார்யம் எனப்படும் உளிபடாத கல்லை இறையருள் வழிகாட்டுதலால் இவர் தொட்டு அழகிய அருணாசலேஸ்வர் லிங்கமாக உருப்பெற செய்துள்ளார். இது இவரின் சமாதி அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் கையால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.புதுவை என்ற சிறு நிலப்பகுதியில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் சமாதி எழுந்தருளியுள்ளார்கள். அவ்வகையில், சத்தியத்தின் ஒளிக்கதிர்கள் வீசுமிடமாக விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகே உள்ளது சின்னபாபு சமுத்திரம் கிராமம்.பல...