Screen Reader Access     A-AA+
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், கிளியனூர் - 604102, விழுப்புரம் .
Arulmigu Agasthieswarar Temple, Kiliyanur - 604102, Viluppuram District [TM020601]
×
Temple History

தல பெருமை

276 தேவார பாடல் பெற்ற தலங்களில் தமிழ்நாட்டில் உள்ள 33 வது பாடல்பெற்ற தலமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் இங்கு மூலவர் சுவாமி சுயம்பு லிங்கமாக அமைந்துள்ளது. இந்த கோவில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்களால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். கோவிலில் உள்ள கல்வெட்டுகளின்படி இந்து கோவில் முதலில் செங்கற்கள் மூலம் கட்டப்பட்டு , பின்னர் பராந்தக சோழ அரசன் காலத்தின் போது கிரானைட் கற்கள் பயன்படுத்தி புனரமைக்கப்பட்டுள்ளது. அகஸ்திய முனிவரால் பூஜிக்கப்பட்டதால் இத்தல இறைவன் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். நந்தி தேவர் மகா சிவராத்திரி தினத்தில் பூஜைகளை நடத்தி , அம்மன் அகிலாண்டீஸ்வரியை வழிபட்டு வணங்கி வருகிறார். இத்திருக்கோயில் ராகு , கேது பரிகார ஸ்தலமாக...