இலக்கிய பின்புலம்
எண்ணாயிரத்தில் அழகிய நரசிங்கப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள முதலாம் இராசேந்திரன் கல்வெட்டு ஸ்ரீமூலஸ்தானம் உடையார், இராஜராஜ விண்ணகர் ஆழ்வார், குந்தவை விண்ணகர் ஆழ்வார், சுந்தர சோழ விண்ணகர் ஆழ்வார், ஆகிய கோயில்களைக் குறிக்கின்றது. இராசராச விண்ணகர் ஆழ்வார் கோயில் தற்பொழுது அழகிய நரசிங்கப் பெருமாள் கோயில் என்று வழங்குகிறது. முதலாம் இராசேந்திரன் காலத்தில் எண்ணாயிரத்தின் ஒரு வேதக்கல்லூரி வேதம், வியாக்கரணம், மிமாம்சம், வேதாந்தம் ஆகியவை கற்பிக்கப்பட்டன. இக்கல்லரியில் படிக்கும் மாணவர்களுக்குத் தனியாக விடுதியொன்றும் இருந்துள்ளது. இக்கோயில் மற்ற கோயில்களிலிருந்து தனித்து விளங்குகிறது. நான்கு அடி உயரமுள்ள பீடத்தின் மீது இக்கோயில் உயர்ந்து நிற்கிறது. கிடந்த நிலையில் பெருமான் காட்சியளிக்கின்றார், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் உள்ள இராமசாமி கோயில் அமைப்பினை இது...