அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை - 606111, கடலூர் .
Arulmigu Theerthapurieswarar Temple, Thiruvattathurai - 606111, Cuddalore District [TM020673]
×
Temple History
தல வரலாறு
திருஞானசம்மந்தர் சிவபெருமாணிடம் முத்துப்பல்லாக்கு முத்துசிவிகை பெற்ற திருத்தலம்திருஞானசம்மந்தர் சிவபெருமாணிடம் முத்துப்பல்லாக்கு முத்துசிவிகை பெற்ற திருத்தலம்
தல பெருமை
இத்தலத்தை, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என மூவரும் பாடி மகிழ்ந்துள்ளனர். இது தவிர, சேக்கிழாரின் பெரியபுராணம், வள்ளலாரின் திருவருட்பாவில
திருஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துச்சிவிகை, முத்துக்குடை, பொற்சின்னங்கள் அருளிய தலம்.
வெள்ளாற்றின் கரையில் உள்ள ஆதித்துறை(காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி), திருக்கரந்துறை எனும் ஏழு துறைத்தலங்களுள் இது முக்கியமான தலம். இந்த ஏழு புண்ணியத்துறைகளில் மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏழு துறைகளையும் சப்தரிஷிகள் பூஜை செய்ய வேண்டி நீவா என்று அழைத்ததாக ஐதீகம். இதுவே நீவா-வடவெள்ளாறு நதியாக மாறியது என்றும் கூறுவர்.
ஆற்றங்கரையோரம் அமைந்த தலம் என்பதாலும், அரம் எனும் நாகம் வழிபட்டதாலும், அரத்துறை என வழங்கப்படுகிறது.இத்தலத்தை, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என மூவரும் பாடி மகிழ்ந்துள்ளனர். இது தவிர, சேக்கிழாரின் பெரியபுராணம், வள்ளலாரின் திருவருட்பாவில
திருஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துச்சிவிகை, முத்துக்குடை, பொற்சின்னங்கள் அருளிய தலம்.
வெள்ளாற்றின் கரையில் உள்ள ஆதித்துறை(காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி), திருக்கரந்துறை எனும் ஏழு துறைத்தலங்களுள் இது முக்கியமான தலம். இந்த ஏழு புண்ணியத்துறைகளில் மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏழு துறைகளையும் சப்தரிஷிகள் பூஜை செய்ய வேண்டி நீவா என்று அழைத்ததாக ஐதீகம். இதுவே நீவா-வடவெள்ளாறு நதியாக மாறியது என்றும் கூறுவர்.
ஆற்றங்கரையோரம் அமைந்த தலம் என்பதாலும், அரம் எனும் நாகம் வழிபட்டதாலும், அரத்துறை என வழங்கப்படுகிறது.