அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருநாவுக்கரசு திருக்கோயில், திருவாமூர் - 607107, கடலூர் .
Arulmigu Pasupathieswarar Temple, Thiurvamur - 607107, Cuddalore District [TM020786]
×
Temple History
தல பெருமை
திருவாமூர் சைவ சமய குரவர்கள் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசு சுவாமிகளும், அவரது தமக்கையாரும், 63 நாயன்மார்களில் ஒருவருமான திலகவதி அம்மையாரும் அவதரித்த திருத்தலமாகும். இத்தலத்தினைச் சேக்கிழார் பெருமான் சிவம் பெருக்கும் திருவாமூர் எனப் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்திருக்கோயில் சிவத்தலத்திற்குரிய அனைத்துப் பரிவார மூர்த்தங்களும் அழகுற அமையப் பெற்றுள்ளதோடு, அப்பர் பெருமானுக்கும், திலகவதி அம்மையாருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளது சிறப்பானதாகும். மேலும், இத்திருக்கோயிலுக்குத் தெற்கே அப்பர் பெருமானையே மூலவராகக் கொண்டு தனித் திருக்கோயில் ஒன்று உள்ளது. அப்பர் திருக்கோயிலின் அர்த்த மண்டபத்தின் இடப்பக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகளின் தமக்கையரான திலகவதி அம்மையாரும், பெற்றோர்களான புகழனார், மாதினியார் ஆகியோர் திருஉருவ சிலைகள் அழகுற அமையப்பெற்று வழிபடப்படுகிறது. திருக்கோயில் தல விருட்சமாகக்...திருவாமூர் சைவ சமய குரவர்கள் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசு சுவாமிகளும், அவரது தமக்கையாரும், 63 நாயன்மார்களில் ஒருவருமான திலகவதி அம்மையாரும் அவதரித்த திருத்தலமாகும். இத்தலத்தினைச் சேக்கிழார் பெருமான் சிவம் பெருக்கும் திருவாமூர் எனப் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்திருக்கோயில் சிவத்தலத்திற்குரிய அனைத்துப் பரிவார மூர்த்தங்களும் அழகுற அமையப் பெற்றுள்ளதோடு, அப்பர் பெருமானுக்கும், திலகவதி அம்மையாருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளது சிறப்பானதாகும். மேலும், இத்திருக்கோயிலுக்குத் தெற்கே அப்பர் பெருமானையே மூலவராகக் கொண்டு தனித் திருக்கோயில் ஒன்று உள்ளது. அப்பர் திருக்கோயிலின் அர்த்த மண்டபத்தின் இடப்பக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகளின் தமக்கையரான திலகவதி அம்மையாரும், பெற்றோர்களான புகழனார், மாதினியார் ஆகியோர் திருஉருவ சிலைகள் அழகுற அமையப்பெற்று வழிபடப்படுகிறது. திருக்கோயில் தல விருட்சமாகக் களர் உகாய் என்ற மரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இம்மரம் கொடிவகையா மரவகையா என்று அறிய இயலாத நிலையில், மரத்தினுடைய இலைகள் அறுசுவைகளை உள்ளடக்கியதாக உள்ளது விந்தையிலும் விந்தையாகும்.