Arulmigu Venugopala Parthasarathi And Rishabeshvarar Temple, Chengam - 606701, Tiruvannamalai District [TM020799]
×
Temple History
தல வரலாறு
பிரதான சன்னதியின் உட்பீடப் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில், கோயில் கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயநகர நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். திறந்த மாகமண்டபத்தில் உள்ள தூண் ஒன்றில், உருவப்பட சிற்பம் உள்ளது. கோயிலைக் கட்டியதாகக் கூறப்படும் ஒரு குறிப்பிட்ட தாலவோய் திம்மப்ப நாயக்கரின் திருவுருவத்தில் இது கூறப்பட்டுள்ளது. அவர் அஞ்சலிமுத்திரையில் தெய்வத்தை நிரந்தரமாக வழிபவராகக் காட்டப்படுகிறார். அவர் ஆண்டாள் சன்னதியில் தனது ராணி திருமாலம்மாவுடன் காட்சியளிக்கிறார், அங்குள்ள தெய்வத்தை வணங்குகிறார்.பிரதான சன்னதியின் உட்பீடப் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில், கோயில் கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயநகர நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். திறந்த மாகமண்டபத்தில் உள்ள தூண் ஒன்றில், உருவப்பட சிற்பம் உள்ளது. கோயிலைக் கட்டியதாகக் கூறப்படும் ஒரு குறிப்பிட்ட தாலவோய் திம்மப்ப நாயக்கரின் திருவுருவத்தில் இது கூறப்பட்டுள்ளது. அவர் அஞ்சலிமுத்திரையில் தெய்வத்தை நிரந்தரமாக வழிபவராகக் காட்டப்படுகிறார். அவர் ஆண்டாள் சன்னதியில் தனது ராணி திருமாலம்மாவுடன் காட்சியளிக்கிறார், அங்குள்ள தெய்வத்தை வணங்குகிறார்.
தல பெருமை
செங்கம் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் இத்திருக்கோவில் தளவ நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.இக் சேத்திரம் முதலில் ஏக சக்ர புரி என அழைக்கப்பட்டது பின்பு செங்கண் மாநகர் என்றும் பிறகு செங்கம் என மருவியது. இத் தளவ நாயக்க மன்னர் ஒரு சமயம் இச் செங்கம் மாநகரில் பெருமாள் ஆலயம் ஆனதை ஸ்தாபிக்க நினைக்கும் போது அவரின் சொப்பனத்தில் சுவாமி ஆனவர் பிருந்தாவனத்தில் பார்த்தசாரதி ஆக காட்சிதர மறுநாள் மன்னர் ஆனவர் பிருந்தாவனம் வந்து பார்க்க அவர் சொப்பனத்தில் கண்ட வண்ணமே பகவான் ஆனவர் பார்த்தசாரதி ஆகவே காட்சியளித்தார் மன்னர் இவ்விடத்திலேயே பெருமாளுக்கு ஆலயம் ஸ்தாபித்தார். இப்பெருமாளானவர் சதுர்புஜங்களோடு பாரத தேசத்திலேயே வேறு எங்கும் கண்டிராத...செங்கம் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் இத்திருக்கோவில் தளவ நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.இக் சேத்திரம் முதலில் ஏக சக்ர புரி என அழைக்கப்பட்டது பின்பு செங்கண் மாநகர் என்றும் பிறகு செங்கம் என மருவியது. இத் தளவ நாயக்க மன்னர் ஒரு சமயம் இச் செங்கம் மாநகரில் பெருமாள் ஆலயம் ஆனதை ஸ்தாபிக்க நினைக்கும் போது அவரின் சொப்பனத்தில் சுவாமி ஆனவர் பிருந்தாவனத்தில் பார்த்தசாரதி ஆக காட்சிதர மறுநாள் மன்னர் ஆனவர் பிருந்தாவனம் வந்து பார்க்க அவர் சொப்பனத்தில் கண்ட வண்ணமே பகவான் ஆனவர் பார்த்தசாரதி ஆகவே காட்சியளித்தார் மன்னர் இவ்விடத்திலேயே பெருமாளுக்கு ஆலயம் ஸ்தாபித்தார். இப்பெருமாளானவர் சதுர்புஜங்களோடு பாரத தேசத்திலேயே வேறு எங்கும் கண்டிராத வண்ணம் சங்கு சக்ர சாரதிய அஸ்தத்தோடு திருமுகத்தை சற்றே சாய்ந்த வண்ணமாய் காட்சியளிக்கிறார் இப்பெருமாளானவர் வேணுகோபால பார்த்தசாரதி என அழைக்கப்பட்டாலும் நாம் இவரை பார்த்தசாரதி யாகவே தரிசிக்கலாம் மகாபாரத காலகட்டத்தில் அர்ஜுனனுக்கு பார்த்தன் தனஞ்செயன் என பல பெயர்கள் இருந்தாலும் அவரை கிருஷ்ணர் ஆனவர் பார்த்தன் என அழைத்ததால் அவருடைய ரதத்தை செலுத்தியதால் பார்த்தனுக்கு சாரதி பார்த்தசாரதிப் பெருமாள் என அழைக்கப்படுகிறார் நமக்கு சுவாமி ஆனவர் ரதத்தை செலுத்தும் சாரதிக்கு உரித்தான ஜாட்டியை கையில் ஏந்திய வண்ணம் காட்சியளிக்கிறார்