Screen Reader Access     A-AA+
அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில், திருவண்ணாமலை, திருவண்ணாமலை - 606601, திருவண்ணாமலை .
Arulmigu Karpagavinayakar Temple, Thiruvannamalai, Tiruvannamalai - 606601, Tiruvannamalai District [TM020815]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வணிகரோருவர் மாதந்தோறும் பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகப் பெருமானை வழிபாட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் அவருக்குத் தீராத நோய் ஏற்பட்டது. குறித்த காலத்தில் பிள்ளையார்பட்டி செல்ல இயலாமல் வருந்திய அவர் நாள்தோறும் பெருமானை நினத்துருகிக் கண்ணீர் மல்க வேண்டினார். அப்பா கணேச நான் உன்னைத் தரிசிக்கவியலாமல் சித்தங்கலங்கி பித்தனானேன். அத்தா அருளாளா எளியேனுக்கு அருள்செய்ய மாட்டாயா என்று நெஞ்சுருகி வேண்டினார். ஒருநாள் அவரது கனவில் விநாயகர் தோன்றி, தமக்கு அருணையம்பதியில் திருக்கோவில் ஒன்று எழுப்புமாறு அருளிச்செய்தார். மறுநாள் கண் விழித்துப் பார்க்கையில் நோயெல்லாம் தீர்ந்து முன்பைவிட உடல் பொலிவுற்று அவ்வணிகர் திகழ்ந்தார். பின்னர் அவர்...