Screen Reader Access     A-AA+
அருள்மிகு பூதநாராயணபெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை, திருவண்ணாமலை - 606601, திருவண்ணாமலை .
Arulmigu Poothanarayanaperumal Temple, Thiruvannamalai, Tiruvannamalai - 606601, Tiruvannamalai District [TM020818]
×
Temple History

தல வரலாறு

கிருஷ்ண பகவானை கொல்வதற்காக அவருடைய மாமன் கம்சனால் அனுப்பப்பட்ட பூதனை குழந்தை கிருஷ்ணனுக்கு பால் கொடுக்கும் போது குழந்தை கிருஷ்ணன் பூதனை அரக்கியின் உயிரையும் சேர்த்து குடித்துவிட்டார். அதனால் இத்திருக்கோவில் பூதநாராயண பெருமாள் என்று வழங்கப்படுகிறது. முற்காலத்தில் கிருஷ்ண பக்தர்களால் இத்திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது

தல பெருமை

வாசுதேவர், தேவகிக்கு எட்டாவது குழந்தையாக ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார். அக்குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த கம்சன் அதனைக்கிருஷ்ணனை கொல்லப் பல வழிகளில் முயற்சித்தான். பூதகி எனும் அரக்கியை அழைத்து குழந்தையை கொள்ளுமாறு கட்டளையிட்டான். அதன்படி சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று பூதகி கிருஷ்ணனைத் தனியாக அழைத்துப் பாலூட்டினால். வந்திருப்பது யாரென்பதை அறிந்து கொண்ட மாயக்கண்ணன் பூதகியின் விஷப்பாலை அருந்துவது போல் பாவித்து அவளைக் கொன்றனன். பின்பொரு சமயம் அரக்கியை வதஞ்செய்த கிருஷ்ணாவதாரக் கோலத்தைத் தனக்கு காட்டியருளுமாறு பிருகு முனிவர், திருமாலிடம் வேண்டினார். அவ்வேண்டுதளுக்குச் செவி சாய்த்து, திருமால் திருவண்ணாமலையில் பூதநாரயணப் பெருமாளாகக் காட்சியளித்து அர்ச்சாரூபமாய் எழுந்தருளினார். காலமாற்றத்தால்...