Screen Reader Access     A-AA+
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், வேட்டவலம் - 606754, திருவண்ணாமலை .
Arulmigu Agastheswarar Temple, Vettavalam - 606754, Tiruvannamalai District [TM020921]
×
Temple History

தல வரலாறு

பண்டைக்காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்ட வேட்டவலம் பகுதியை வீரபாண்டிய சோழன் எனும் மன்னன் அரசு செய்து வந்தான். அவனது காலத்தில் விவசாயி ஒருவன் தனது நிலத்தில் ஏர் கலப்பை கொண்டு உழும்போது, ஓரிடத்தில் ஏர் கலப்பை நின்று கணீர் என்று சப்தம் கேட்டது. அதனைக் கவனத்தில் கொள்ளாது தொடர்ந்து அவன் நிலத்தினை உழுது சென்றான். அவ்வமயம் ஏர் கலப்பை நின்று சப்தம் கேட்ட இடத்தில் இரத்தம் பீறிட்டுச் செல்வதைக் கண்டு பயந்தோடி ஊர் மக்களிடம் விவரம் கூறினான். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசனை நாடி விவரத்தைக் கூறினர். அரசன் தனது அமைச்சர்களுடன் சேர்ந்து குலகுருவை நாடினான். அவர் ஞானதிருட்டி மூலம் விவரம் அறிந்து இரத்தம் பெருகியோடிய விவசாயியின் நிலத்தில் அபிசேக ஆராதனைகள்...