தல வரலாறு
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், மிரளூர் கிராமம் ஊரின் நடுவே அமைந்திருக்கும் ஸ்ரீ புற்றுமாரியம்மன் ஏறக்குறைய ஐந்து தலைமுறைக்குமேல் அதாவது 200 ஆண்டுகள் முப்பாட்டனார் காலத்திலிருந்து இந்த மாரியம்மனை இவ்வூர் மக்கள் வழிபட்டு வந்ததாக அறியமுடிகிறது. இக்கோயில் ஆரம்பகாலத்தில் புற்றுடன் கூடிய சிறிய கொட்டகையில் இருந்ததாகவும் பாலாலயம் செய்யப்பட்டுள்ள சிறிய வடிவில் வீற்றிருக்கும் அம்மன் தான் வழிபாட்டு தெய்வம் அதாவது மூலவர்.