Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், சூளை, சென்னை - 600112, சென்னை .
Arulmigu Chidhamparaswarar Temple, Choolai, Chennai - 600112, Chennai District [TM000219]
×
Temple History

தல வரலாறு

சென்னை-112, சூளையில் உள்ள சிதம்பரரேஸ்வரர் கோயில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் சிதம்பரம் நடராஜர் கோயிலை போலவே சிறிய ஸ்படிக லிங்கத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. சிதம்பரத்தின் (தில்லை) பிரதிபலிப்பாய் சென்னை சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானத்தை தோற்றுவித்தவர் திரு.கா.வெங்கடேச முதலியார் ஆவார். காஞ்சிபுரத்தில் சைவ வேளாளர் மரபில் தோன்றி அண்ணாமலை முதலியாரின் மூத்த மகனாவார். இவர் சிவமூர்த்தங்கலில் பிரதான மூர்த்தியான ஸ்ரீநடராஜப் பெருமாளை ஆத்மார்த்த தெய்வமாக பூஜித்து வந்தார். இவர் அடிக்கடி சிதம்பரம் சென்று ஸ்ரீஆனந்ததாண்டவ மூர்த்தியை கண்டு களிப்புற்றார். தனக்குப் பின்னால் தான் ஆத்மார்த்த பூசை செய்து வந்த ஸ்ரீநடராஜமூர்த்தியை பிறரிடம் ஒப்படைக்க மனம் இல்லாமல் ஸ்ரீ நடராஜருக்கு தனிக்கோயிலாக அமைக்க ஆண்டவன் உத்தரவு அளித்ததன் பேரில் சூளையில் தான்...