தல வரலாறு
தில்லையம்பதிக்கும் அருகில் உள்ளதும் சான்றோர் பலரால் பாடப்பெற்றதுமாகிய திருகொத்தட்டை என்னும் திருப்பதி . இவ்வழகிய தலத்தில் எழுந்தருளியிருப்பவரும் பாண்டு மைந்தர்களில் சிறந்த பார்த்தனின் புதல்வராய் அரவான் என்னும் திருப்பெயரோடு தோன்றியவரும் போர்முகப்பில் பலியிடுவதருக்கு தகுதியான எல்லோரினும் சிறந்தவரும், துரியோதரனுக்கு மறுக்காமல் தன் உயிரை பலியிட உடன்பட்டவருமாகிய கூத்தாண்டவரை மூலவராக கொண்டு இந்த திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது.