அருள்மிகு ஆண்டவர் (எ) செட்டிவீரப்பசாமி திருக்கோயில், Kothattai - 608501, கடலூர் .
Arulmigu Andavar Attached With Chetti Veerappasamy Temple, Kothattai - 608501, Cuddalore District [TM022265]
×
Temple History
தல வரலாறு
தில்லை திருச்சிற்றம்பலத்திற்கு வடதிசையில் பல் வளம் செறிந்து விளங்குவதே கோத்திட்டை என்னும் கிராமமாகும் . கோத்திட்டை என்னும் பெயர் நாளடைவில் கொத்தட்டை என வழங்கபெற்று வருகிறது. இப் புண்ணிய தலமாம் கொத்தட்டை கிராமத்தில் அருள்மிகு ஆண்டவர் என்கிற செட்டிவீரப்ப சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலுக்கு வடபுறம் மண்மலை மற்றும் காயாம்பூக்கள் செறிந்த காடுகள் உள்ளன முற்காலத்தில் இந்த மண்மலையையே ஈஸ்வரனாக நினைத்து வழிபட்டுள்ளனர். இம்மலைகளுக்கு வடகீழ்ப்பால் சுகுணத் தியானம் செய்ய வந்த அகத்திய மாமுனிவர் தனது கையில் இருந்த கமண்டலத்தை தவறவிட்டுவிட்ட அதனை தேடும் முயற்சியாக மண்மலையின் அடியில் தோண்டும் போது ஏற்பட்ட பள்ளம் பிற்காலத்தில் சர்க்கரை தீர்த்தம்என்றழைக்கப்பட்டு வருவதாக செவிவழி செய்திகள் மூலம் தெரிகிறது இத்திருக்குளத்தில் மூழ்கும் ஆண்களும்...தில்லை திருச்சிற்றம்பலத்திற்கு வடதிசையில் பல் வளம் செறிந்து விளங்குவதே கோத்திட்டை என்னும் கிராமமாகும் . கோத்திட்டை என்னும் பெயர் நாளடைவில் கொத்தட்டை என வழங்கபெற்று வருகிறது. இப் புண்ணிய தலமாம் கொத்தட்டை கிராமத்தில் அருள்மிகு ஆண்டவர் என்கிற செட்டிவீரப்ப சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலுக்கு வடபுறம் மண்மலை மற்றும் காயாம்பூக்கள் செறிந்த காடுகள் உள்ளன முற்காலத்தில் இந்த மண்மலையையே ஈஸ்வரனாக நினைத்து வழிபட்டுள்ளனர். இம்மலைகளுக்கு வடகீழ்ப்பால் சுகுணத் தியானம் செய்ய வந்த அகத்திய மாமுனிவர் தனது கையில் இருந்த கமண்டலத்தை தவறவிட்டுவிட்ட அதனை தேடும் முயற்சியாக மண்மலையின் அடியில் தோண்டும் போது ஏற்பட்ட பள்ளம் பிற்காலத்தில் சர்க்கரை தீர்த்தம்என்றழைக்கப்பட்டு வருவதாக செவிவழி செய்திகள் மூலம் தெரிகிறது இத்திருக்குளத்தில் மூழ்கும் ஆண்களும் , இத்திர்த்தம் கொண்டு நீராட வைக்கும் பெண்களும் சகல நன்மைகளும் பெற்று வருகின்றனர். மேற்சொன்ன மண் மலையின் தென்கீழ் திசையில் விநாயகர் மட்டும் உருவ வழிபாடாகவும், ஈஸ்வரனை அருவ வழிபாடாகவும் கொண்டு ஆண்டவர் என்கிற வீரப்பசுவாமி திருக்கோயில் என்கிற பெயரால் விளங்கி வருகிறது.