தல வரலாறு
முதலாம் ராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டில் ஏமப்பேறூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு, இவ்வூர் சபையாரும், ஊரவரும் இறையிலிதேவதானமாக நிலம் கொடுத்து உள்ளனர். இவர்கள் இந்நிலத்தின் எல்லைகளையும், நீர்பாய்கின்ற முறையையும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்நிலத்தின் மூலம் வரும் நெல்லை, திருக்கோயிலில் செய்யும் பூஜைகளுக்கும், நடைபெறுகின்ற இருவிழாக்களுக்கும், வேலை செய்கின்ற பணியாளர் ஊதியங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறியமுடிகிறது. இறைவனுக்கு மூன்று சந்தியும் திருவமிர்து, இரண்டு கரியமுது, நெய்யமுது, தயிரமுது, அடைக்காய், வெற்றிலை கொண்டு வழிபாடு செய்ப்பட்டதை இக்கல்வெட்டுகள் கூறுகின்றது. இக்கோயிலுக்கு நந்தா விளக்கு எரிப்பதற்கு 192 ஆடுகள், 32 பசுக்கள் இறையிலிதானமாக கொடுத்த செய்தி அறியமுடிகின்றது.