அ.மி பழனியாண்டவர் திருக்கோயில், பெரம்பூர், சென்னை - 600011, சென்னை .
Arulmigu Palani Andaver Temple, Perambur, Chennai - 600011, Chennai District [TM000231]
×
Temple History
தல வரலாறு
சென்னை மாவட்டம் பெரம்பூர் வட்டம், துளசிங்கம் தெருவில், எண். 104ல், அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் வள்ளி தெய்வானை சமேத சப்பிரமணியர் சுவாமியை மூலவராக கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதியை தொடர்ந்து, பழனி ஆண்டவர் சன்னதி, வெங்கடேச பெருமாள் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, துர்கை சன்னதி, நடராஜர் சன்னதி, ...சென்னை மாவட்டம் பெரம்பூர் வட்டம், துளசிங்கம் தெருவில், எண். 104ல், அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் வள்ளி தெய்வானை சமேத சப்பிரமணியர் சுவாமியை மூலவராக கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதியை தொடர்ந்து, பழனி ஆண்டவர் சன்னதி, வெங்கடேச பெருமாள் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, துர்கை சன்னதி, நடராஜர் சன்னதி, நவகிரக சன்னதி, சொர்ணபைரவர் சன்னதி, ராகவேந்திரர் சன்னதி, சர்வசித்தி விநாயகர் சன்னதி, தெட்சிணாமூர்த்தி சன்னதி, சோம நதா சுவாமி சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி, சொர்ணாம்பிகை சன்னதி, மயில் வாகனம், பலிபீடம் கொடிமரம், இராஜகோபுரம், மடப்பள்ளி சேமிப்புஅறை, அர்த்த மண்டபம், ம மண்டபம், வெளி மண்டபம், ஆகிய பகுதிகளை கொண்டு விளங்குகிறது.இத்திருக்கோயில் கருவரை சதுர வடிவில் உள்ளது. கருவரையில் மேல்தளம் பாவுகற்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது இடையில் செம்மரம் இணைக்கப்பட்டு உள்ளது, கருவரை மேல் மூன்று தள விமானம் உள்ளது.கருவறையின் சுவரை ஒட்டி நீண்ட அதிட்டான மேடை உள்ளது அதன் மேல் சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை சூழ நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். நடுவே வட்டமான தாமரை இருக்கை மீது நான்கு கரங்களுடன் கிழக்கு திசைநோக்கி நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் .மேற்கரங்களில் சக்திபடையும், வஜ்ஜிர படையும், கத்திரி முத்திரையில் உள்ளன. கீழ் வலக்கரம், அபயம் முத்திரையில் , அருள்பாலிக்கும் கரமாக அமைந்துள்ளது.
கீழ் இடக்கரம், இடுப்பின் மீது கடி முத்திரையில் அமைந்துள்ளது. சுப்பிரமணியர் தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்கிறது மகர குண்டலம்,காதிலும் ருத்ராட்சை மாலை, ருத்ராட்சை மாலை, மணிவடம் கழுத்திலும், பூல் மார்பிலும், இடைகச்சை இடையிலும், கழல் காலிலும் அணிகலன்கள் சுப்பிரமணியரை அணி செய்கின்றன.
சுப்பிரமணியர் வலப்புரம் வள்ளியின் சிற்ப வடிவம் உள்ளது. வள்ளி இரண்டு கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் , வலக்கரம் லோலா மூத்திரையில் தாழ்கரமாக உள்ளது, இடகரம் கடக முத்திரையில் தாமரை மலரை பிடித்துள்ளது, வள்ளியின் தலையை கரண்ட மகுடம் , காதில் குண்டலம், மார்பில் குஜபந்தம் தனசூத்திரம் , தோள் வளையும், கை வளையுல், இடையில் கச்சை, காலில் பாதசரம் ஆகிய அணிகலன்கள் வள்ளியை அலங்கரிக்கின்றன. தெய்வானை சுப்பிரமணியர் இடபுறம் இரண்டு கரங்களுடன் தெய்வானை நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார், வலக்கரம் கடக முத்திரையில் நீலோற் பலம் மலரை பிடித்தள்ளார், பாதசரம் , இடைகச்சை தன சூத்திரம், கண்ட சரம், மணிவடம் தோள்வளை, கை வளை, மகர குண்டலம், கரண்ட மகுடம் ஆகிய அணிகள் தெய்வானையை பாதம் முதல் கேசம் வரை அலங்கரிக்கின்றன.