Arulmigu Pasupatheeswarar Temple, Varanjaram - 606203, Kallakurichi District [TM023597]
×
Temple History
தல வரலாறு
தேவர்கள் சாபம் பெற்று பசுக்களாக பூலோகத்திற்கு வந்தனர் அந்த தேவர்களின் சாபங்களை போக்கியவர்தான் பசுபதீஸ்வரர். அதாவது தேவர்கள் சாபம் பெற்று பூமிக்கு வந்தனர்.சாபத்தை எவ்வாறு நிவர்த்தி செய்து மீண்டும் தேவலோகத்திற்கு செல்வது என்று கேட்டபோது அதற்கு பூலோகத்தில் வரஞ்சரம் என்ற ஊர் ஒன்று உள்ளது அங்கு இருக்கும் சிவனுக்கு தினசரி பூஜை செய்தால் உங்களுக்கு மோட்சம் கிட்டும் என தேவர்களுக்கு சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேவர்கள் பசுக்களாக பூமிக்கு வந்து, வரஞ்சரம் என்னும் ஊரில் உள்ள சிவனுக்கு பூஜை செய்திட வேண்டி தங்களுடைய கொம்பால் ஒரு நதியை உருவாக்கினார். அந்நதியின் பெயர்தான் கோமுகி. கோமுகி நதியிலிருந்து தினசரி பசுக்கள் தங்களது வாய் மூலமாக தண்ணீரை எடுத்து வந்து சிவனுக்கு பூஜை செய்ததால், இத்தளத்தில்...தேவர்கள் சாபம் பெற்று பசுக்களாக பூலோகத்திற்கு வந்தனர் அந்த தேவர்களின் சாபங்களை போக்கியவர்தான் பசுபதீஸ்வரர். அதாவது தேவர்கள் சாபம் பெற்று பூமிக்கு வந்தனர்.சாபத்தை எவ்வாறு நிவர்த்தி செய்து மீண்டும் தேவலோகத்திற்கு செல்வது என்று கேட்டபோது அதற்கு பூலோகத்தில் வரஞ்சரம் என்ற ஊர் ஒன்று உள்ளது அங்கு இருக்கும் சிவனுக்கு தினசரி பூஜை செய்தால் உங்களுக்கு மோட்சம் கிட்டும் என தேவர்களுக்கு சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேவர்கள் பசுக்களாக பூமிக்கு வந்து, வரஞ்சரம் என்னும் ஊரில் உள்ள சிவனுக்கு பூஜை செய்திட வேண்டி தங்களுடைய கொம்பால் ஒரு நதியை உருவாக்கினார். அந்நதியின் பெயர்தான் கோமுகி. கோமுகி நதியிலிருந்து தினசரி பசுக்கள் தங்களது வாய் மூலமாக தண்ணீரை எடுத்து வந்து சிவனுக்கு பூஜை செய்ததால், இத்தளத்தில் உள்ள சிவனுக்கு பசுபதீஸ்வரர் என பெயர் உருவாகிற்று. பின்பு சாபம் நீங்கி தேவர்கள் மீண்டும் தேவ லோகம் சென்றனர்.
இத்தளத்தில் உள்ள மூர்த்திக்கு பசுபதீஸ்வரர் என்றும் அம்பாளுக்கு பாலாம்பிகை என்றும் பெயர்.
ஊர் பெயர் காரணம்
இராவணன் சிவனை நோக்கி கடுமையாக தவம் செய்கிறான். தவத்தை மெச்சிய சிவபெருமான் இராவணன் முன்பு தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்று கூறுகிறார். இராவணனும் எனக்கு மூன்றரை கோடி ஆயுள், உண்மையான பார்வதி, மந்திரவாள் ஆகிய மூன்றையும் சிவபெருமானிடம் கேட்கிறார். சிவபெருமானும் இராவணனுக்கு மேற்கண்ட அனைத்து வரங்களையும் அளித்து விடுகிறார். இதனை அறிந்த பெருமாள் மேற்கண்ட வரங்களை ராவணன் வாங்கி சென்று விட்டாள், இவ்வுலகத்தில் அவனை அழிக்கவே முடியாது என்று எண்ணினார். எனவே எப்படியாவது இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பூலோகத்துக்கு புறப்பட்டு செல்கிறார். பூலோகத்தில் மாளிகை மேடு என்ற இடத்தில் பெருமாள் அந்தணராக வேடமிட்டு துளசி செடியை தலைகீழாக நட்டு வைத்து ஓட்டை பானையில் தண்ணீர் ஊற்றுவது போன்று ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார் அதை பார்த்துக் கொண்டே இராவணன் செல்கிறார். இதன் பிறகு இராவணனுக்கு தண்ணீர் தாகத்தை ஏற்படுத்துகிறார். உடனே ரதத்தை இராவணன் கீழே இறக்கி தண்ணீர் குடிக்க செல்கிறார் அங்கு வந்த பெருமாள் பார்வதி தேவியை அழைத்துச் சென்று ஞானம் உள்ளவர்களின் கண்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும் என்பதால் விபூதியால் கோட்டை கட்டி விடுகிறார். பின்பு பார்வதி தேவி நடந்து சென்ற காலடித்தடம் தெரியாமல் இருக்க இங்குள்ள பெருமாள் தனது பாதத்தை குதிரை குளம்பாக மாற்றி அப்பாத தடங்களை மறைத்துள்ளார். எனவே இங்குள்ள பெருமாளுக்கு அஸ்வபாத பெருமாள் என்ற பெயர். (இத்திருக்கோவிலில் அமைந்துள்ள பெருமாளுக்கு பாதம் மட்டும் குதிரை குளம்பு வடிவில் தற்போதும் இருக்கிறது) பாலாம்பிகைக்கு ஞான பூங்குழலி என்ற பெயரும் உண்டு. இராவணன் தண்ணீர் அருந்திவிட்டு தனது ரதத்துக்கு அருகில் வருகிறார். அங்கு பார்வதி தேவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். உடன் அங்கு வந்த பெருமாள் இராவணனை பார்த்து நீங்கள் கைலாயத்திலிருந்து வருகிறீர்களா என்று கேட்கிறார். ஆம் நான் கைலாயத்திலிருந்து தான் வருகிறேன் இது உங்களுக்கு எப்படி தெரியும் என்று ராவணன் அந்தணர் வடிவாக இருக்கும் பெருமாளை பார்த்து கேட்கிறார். நீங்கள் வரும்போது அந்தணர் ஒருவர் துளசி செடியை தலைகீழாக நட்டு ஓட்டை சட்டையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாரா என்று கேட்கிறார். அதற்கு ராவணனும் ஆம் என்று கூறுகிறார். இதனைக்கேட்ட அந்தணர் நீங்கள் கயிலாயத்தில் என்னென்ன வரம் வாங்கி வந்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு ராவணன் மூன்றரை கோடி ஆயுள் உண்மையான பார்வதி மற்றும் மந்திரவாள் ஆகிய மூன்று வாரங்களையும் வாங்கி வருவதாக கூறினார். உடனே அதற்கு அந்த அந்தணர் உங்களை சிவபெருமான் ஏமாற்றி விட்டதாக கூறுகிறார். உடனே இராவணன் தற்போது நான் என்ன செய்வது என்று கேட்கிறார். அதற்கு நீங்கள் மீளவும் கைலாயம் சென்று மூன்றரை கோடி ஆயுளுக்கு பதிலாக அரை கோடி ஆயுளும் உண்மையான பார்வதிக்கு பதிலாக மாயப் பார்வதியும் மந்திரவாளுக்கு பதிலாக மாயவாளும் வரமாக கேட்டு வாங்குங்கள் அதுதான் உண்மையான வரம் என்று கூறுகிறார். உடனே இராவணனும் கைலாயத்திற்கு சென்று சிவபெருமானிடம் மூன்றரை கோடி ஆயுளுக்கு பதிலாக அரை கோடி ஆயுளும் மாயப் பார்வதியும் மாயவாளும் வாங்கி வருகிறார். எனவே இராவணனின் வரம் குறைக்கப்பட்டதால் இவ்வூருக்கு வரஞ்சரம் என்று பெயர்.
இரண்டாம் குலோத்துங்க சோழன் ஒரு பன்றியை வேட்டையாட துரத்தி வருகிறார். பன்றியின் சருமத்தில் நோய் இருந்தது அப்பன்றி வரஞ்சரத்தில் உள்ள குளத்தில் விழுந்து எழுந்து ஓடுகிறது அப்படி குளத்தில் விழுந்து எழுந்து ஓடும்போது அதன் மீது இருந்த சரும நோய் நீங்கிவிடுவதை குலோத்துங்க சோழன் கண்டுவிடுகிறார். குலோத்துங்க சோழனுக்கும் சரும நோய் இருந்தது. எனவே குலோத்துங்க சோழன் குளத்தில் தனது மூக்கை மட்டும் மூடிக்கொண்டு நீரில் மூழ்கி எழுகிறான். அவ்வாறு குளத்தில் மூழ்கி மேலே எழும்போது மூக்கை மட்டும் பிடித்துக் கொண்டு மூழ்கி இருந்ததால் மூக்கில் உள்ள சரும நோய் மட்டும் அப்படியே இருக்கிறது மற்ற அனைத்து நோயும் நீங்கி விடுகிறது. திருக்குளத்தின் பெயர் மானஸத தீர்த்தம். உடனடியாக இந்த இடத்தில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து பார்த்தபோது சிவபெருமான் சுயம்புலிங்கமாக அங்கு காட்சி அளிக்கிறார். உடனே சிவபெருமானுக்கு அங்கு இரண்டாம் குலோத்துங்கனால் கோயில் எழுப்பப்படுகிறது.