தல வரலாறு

அருள்மிகு வல்லப விநாயகர் திருக்கோவில் திருவண்ணாமலையின் மையப் பகுதியில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு கிழக்கே அமைந்துள்ளது. கருவறை, அர்த்த மண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கருவறைக்கு பின்பகுதியில் உள்ள மடப்பள்ளி அறை சிதிலமடைந்துள்ளது இதனை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும். கருவறையில் உள்ள மூலவர் சிற்பம் மற்றும் தேவகோட்ட சிற்பங்கள் மற்றும் நீள் உருண்டையான தூண்களை கொண்டு இத்திருக்கோயில் 14-15 ம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.