Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஆலந்தூர், சென்னை - 600016, சென்னை .
Arulmigu Siva Subra Mania Swamy Temple, Alandur, Chennai - 600016, Chennai District [TM000243]
×
Temple History

தல வரலாறு

பண்டைய காலத்தில் அகத்திய மாமுனிவர் இத்தலத்தில் புனித தவம் இயற்றிக் கொண்டிருக்கும் தருணத்தில் எழில் வேல் அரசானான எம்தந்தை முருகன் சிறுவனாக தோன்றி அவருக்கு அறிவுரை வழங்கினார். அவற்றை அகத்தியர் பச்சிளம் பாலகன் ஒருவன் என நினைத்து அலட்சியப் படுத்தி அதனை ஏற்க மறுத்த போது அன்னை பராசக்தி அகத்தியர் முன் தோன்றி அகத்தியரே அந்தப் பாலகன் வேறு யாருமல்ல என் அருட்செல்வன் முருகனே தான் என்றுரைக்க சிவபெருமானும் தோன்றி காட்சி அளித்தார். விநாயகப் பெருமானும் ஆனந்தக் கூத்தாடினார். இதனால் முருகனுக்கு சிவசுப்பிரமணியர் என்று பெயர் வந்தது என்று கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் சிவசுப்பிரமணியர் கிழக்கு முகமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு ஆறு முகங்கள் பன்னிரண்டு கைகள் உள்ளன. மயில்...