தல வரலாறு

அருள்மிகு தர்மராஜா திரௌபதியம்மன் திருக்கோவில் திருவண்ணாமலையில் மலை அடிவாரத்தில் கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது. மகாபாரதத்துடன் தொடர்புடையதும், நாட்டாற் வழக்காற்றலும் உடையது இத்திருக்கோவில் காலத்தால் 14-15 ஆம் நூற்றாண்டை சார்ந்தது என இங்குள்ள சிற்பம், நீள் உருண்டையான மண்டப தூண்களை கொண்டு அறிய முடிகிறது. அகன்ற நீள் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டுள்ள கர்ப்பகிருகத்தின் பீடத்தில் தர்மராஜர் மற்றும் திரௌபதியம்மன் அமைக்கபட்டுள்ளது. இதனை சுற்றிலும் மரத்தால் செய்த பஞ்சபாண்டவர்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.