Screen Reader Access     A-AA+
அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில், Parithipuram - 604407, திருவண்ணாமலை .
Arulmigu Gangai Amman Temple, Parithipuram - 604407, Tiruvannamalai District [TM024657]
×
Temple History

புராண பின்புலம்

முன்னொரு காலத்தில் ஜமதக்கினி என்கிற முனிவர் தனது மனைவி ரேணுகாதேவி கெங்கைஅம்மன் மற்றும் மகன்களுடன் வாழ்ந்து வந்தார். ரேணுகாதேவி தினமும் தாமரை குளத்தில் நீராட செல்வது வழக்கம். அவ்வாறு நீராட செல்லும்போது மண்ணால் குடம் செய்து, நீராடிவிட்டு திரும்பி வரும்போது மண் குடத்தில் தண்ணீர் எடுத்து வருவார். அதேபோல் ஒருநாள் ரேணுகாதேவி தாமரை குளத்திற்கு சென்று நீராடி உள்ளார். அப்போது வான்வழியே சென்ற கந்தர்வனின் நிழல் குளத்தில் தெரிந்துள்ளது. அந்த கந்தர்வன் அழகில் சில நொடிகள் ரேணுகாதேவி மயங்கி உள்ளார். இதை ஞான திருஷ்டி மூலம் உணர்ந்த ஜமதக்கினி முனிவர், தனது மனைவி கற்பு நெறியை தவறி விட்டதாக கடும் கோபம் கொண்டார். இந்த குற்றத்திற்கு தண்டனையாக தனது மகன் பரசுராமனிடம் உனது தாயின்...