தல வரலாறு
திருத்தொடை நாட்டில் காஞ்சி மாநகருக்கு மேற்கில் பாலாற்றின் தென் கரையில் ஆற்காடு அருகில் அமைந்துள்ள ஊா் பனமுகை என்பதாகும். அங்கு மிகப்பழமை வாய்ந்த அருள்மிகு விஸ்வநாதா் ஆலயம் அமைந்துள்ளது. ஆற்காடு பகுதியில் முனிவா்கள் தங்கி பல இடங்களில் சிவ புஜை செய்திருக்கிறாா்கள். பனைமரத்தின் நிழலை இருப்பிடமாகக் கொண்டு இருந்த ஓா் முனிவருக்கு பனைமுகமுனி ன்று அழைக்கப்பட்டுள்ளாா். பனைமரங்கள் நிறைந்த இடத்தில் சிவபுஜை செய்ததாகத் தொிகிறது. அவா் பெயரே ஊருக்கு வழங்கப்பட்டது. பனைமுகமுனியுா் என்பது காலப்போக்கில் பனமுகை என்று அழைக்கப்பட்டுவருகிறது.