Screen Reader Access     A-AA+
அருள்மிகு கச்சாலீசுவரர் திருக்கோயில், பாரிமுனை, சென்னை - 600001, சென்னை .
Arulmigu Katchaleeshwarar Temple, Parrys, Chennai - 600001, Chennai District [TM000250]
×
Temple History

தல பெருமை

இத்திருக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் அமையப் பெற்ற கோயிலாகும். கிழக்கு இந்திய கம்பெனியில் ``துபாஷ்`` ஆக வேலைபார்த்த தளவாய் செட்டியார் காஞ்சியில் உள்ள ஸ்ரீ கச்சபேஸ்வரரை தினசரி தரிசித்து விட்டு வருவது வழக்கம். ஒருநாள் காஞ்சிக்கு சென்ற அவர் பாலாறு நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னைக்கு மிக அவசர பணி செய்ய அவரால் இயலாத நிலை ஏற்பட்டதால் மிக வேதனை எய்தினார். இறைவன் அவர் கனவில் தோன்றி சென்னையிலையே ஆலயம் அமைத்து வழிபட பணித்தார் என்பது வரலாறு உள்ளது. சிவபெருமாள் அனைத்து ஆலயங்களிலும் லிங்க உருவமாகத் தான் தரிசனம் தருகிறார். ஆனால், இத்திருக்கோயிலில் தான் மூலலிங்கத்தின் பின்பும் ஐந்து முகங்களுடன் சிவபெருமான் சதா சிவ மூர்த்தி மனோன்மணித்தாயாருடன் காட்சி தருகிறார்