Screen Reader Access     A-AA+
அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், பாரிமுனை, சென்னை - 600001, சென்னை .
Arulmigu Selva Vinayagar Temple, Parrys, Chennai - 600001, Chennai District [TM000251]
×
Temple History

தல வரலாறு

சென்னை மாநகரில் மண்ணடி பகுதியில் உள்ள லிங்கிசெட்டி தெருவில் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு இந்திய கம்பெனியில் துபாஷ் ஆக பணிபுரிந்த தம்பு செட்டி என்பவரும் அதே தெருவில் உள்ள வியாபாரிகளுடன் சேர்ந்து தெருவின் முனையில் சிறிய விநாயகரை வைத்து வழிபட்டு வந்தனர். பிறகு மேற்படி இடத்தில் கற்களால் மண்டபமும் செங்கற்களால் மூலவர் சன்னதியும், வாகன மண்டபமும், வடபுறம் வருமானத்திற்காக கடைகளும் கட்டப்பட்டதாக தெரியவருகிறது.