Screen Reader Access     A-AA+
அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், Thirumalapadi - 621851, அரியலூர் .
Arulmigu Vaithiyanathaswamy Temple, Thirumalapadi - 621851, Ariyalur District [TM025230]
×
Temple History

தல வரலாறு

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே - சுந்தரமூர்த்தி சுவாமிகள் தென்னாடாகிய தமிழ்நாட்டில் சிவபெருமான் உறையும் கோயில்கள் பல. அவற்றுள் சைவ சமயக் குரவர்களால் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில்கள் 274 உள்ளன. அவைகளுள் என்றும் வற்றாத புதுப்புனலையுடைய பொன்னி என்னும் காவிரிநதி பாயும் சோழ நாட்டில் காவிரியின் தலைமகளாம் கொள்ளிடத்தின் வடகரையில் அரியலூர் மாவட்டத்தில்...

தல பெருமை

அரியலூர் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் திருமழபாடி. இவ்வூர் அரியலூருக்குத் தெற்கே முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ளதாகும். திருமானூர் ஒன்றியத்தைச் சார்ந்தது. தேவாரம் பாடிய மூவராலும் பாடப்பெற்ற ஊராதலின் நாடறி நல்லூராகச் சிறப்பு பெற்றதாகும். இவ்வூரின் வரலாற்றுச் செய்திகளை தொகுத்துப் பார்ப்பதே இப்படைப்பின் நோக்கமாகும்.வரலாற்று அடிப்படையில் நெடிய வரலாற்றைக் கொண்ட இடம் திருமழபாடி. கோயிலும் அத்தகைய வரலாற்றைப் பெற்றதே. அரியலூர் மாவட்டத்தில் தேவாரப் பாடல் பெற்ற இடங்கள் திருமழபாடி, கீழப்பழூவூர், கோவிந்தப்புத்தூர் ஆகிய மூன்று இடங்கள் மட்டுமே. கீழப்பழூவூர் திருஞான சம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்ற தலமாகும். கோவிந்தப்புத்தூர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவராலும் பாடப் பெற்ற இடமாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற இடம்...