தல பெருமை
பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அவர் உருவாக்கிய குளம் பரசுராம தீர்த்தம் எனப்படுகிறது. மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில் கஜலட்சுமி சிற்பம் அமைக்கப்பட்டிருக்கும் ஆனால் இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பது போன்ற சிற்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இத்தலம் பரசுராமருக்கு பாப விமோசனம் போக்கிய தலம் என்பதை அறியமுடிகிறது.