Screen Reader Access     A-AA+
அருள்மிகு கலியுகவரதராசப்பெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி, அரியலூர் வட்டம், போன் நெ.04329 228890 பின்கோடு - 621705, அரியலூர் .
Arulmigu Kaliyugavaradharajaperumal Temple, Kallankurichi - 621705, Ariyalur District [TM025260]
×
Temple History

தல வரலாறு

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கடுகூரில் வாழ்ந்து கொண்டிருந்த கோபாலன் படையாட்சி, கடுகூரிலிருந்து வந்து மேற்படி ஊருக்கு தெற்கிலிருந்த காடுகளை வெட்டி மேடுபள்ளம் திருத்தி, உழுது பயிரிடவும் வீடுகள் கட்டவும், நிலத்தை சீர்படுத்தினார். கோபாலன் படையாட்சி தாம் சீர்படுத்திய நிலத்தில் வீடு கட்டிக் குடியேறினார். மற்றும் பலரை குடியமர்த்தினார். இதனால் இவரால் உண்டாக்கிய இந்த ஊருக்கு கோபாலன்குடிக்காடு எனும் பெயரிட்டனர். (தற்பொழுது கோப்பிலியன்குடிக்காடு என்று அழைக்கப்படுகிறது) கோபாலன் படையாட்சிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த்து. அந்த குழந்தைக்கு மங்கான் என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்தனர். மங்கான் படையாட்சிக்கு தக்க வயதடைந்ததும் அவருக்கு தந்தை கோபாலன் படையாட்சி திருமணம்...