அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், Karur - 639001, கரூர் .
Arulmigu Anjaneya Swamy Temple, Karur - 639001, Karur District [TM025308]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயிலில் மாத்வ ஸ்ம்ப்ரதாயப்படி பூஜை நடைபெறு ம் தலம். இந்த கோவிலில் அபிஷேகம் காலை வேலைகளில் மட்டும்நடத்தப்படும். காலை பூஜைகள் முடிந்து பூஜைகள் ஸ்வாமி தீர்த்தத்தை உட்கொண்டு விட்டால் மீண்டும் அன்று முழுவதும் ஸ்வாமிகளை தொட்டு பூஜைகள் செய்யும் சம்ப்ராதயம் கிடையாது. மீண்டும் மறுநாள் காலை தான் மூலவரை தொட்டு பூஜிப்பார். மாலை வேலைகளில் தூர இருந்தபடி தீபாரதனைகள் செய்வது ஸம்ப்ராதாயம் . இத்தலம் கரூர் நகரம் மத்தியில் அமைந்துள்ளது. ஆதியில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு பின்பு காலப்போக்கில் மத்வயதி ஸ்ரீ வியாஸராஜரால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ முக்யப்ராணர் பிரதிஷ்டை செய்யப்பட்டு (வருடம் பற்றிய குறிப்பு இல்லை) அன்ற முதல் அந்த வீதிக்கே அனுமந்ராயர் கோவில் தெரு என பெயரிடப்பட்டது....இத்திருக்கோயிலில் மாத்வ ஸ்ம்ப்ரதாயப்படி பூஜை நடைபெறு ம் தலம். இந்த கோவிலில் அபிஷேகம் காலை வேலைகளில் மட்டும்நடத்தப்படும். காலை பூஜைகள் முடிந்து பூஜைகள் ஸ்வாமி தீர்த்தத்தை உட்கொண்டு விட்டால் மீண்டும் அன்று முழுவதும் ஸ்வாமிகளை தொட்டு பூஜைகள் செய்யும் சம்ப்ராதயம் கிடையாது. மீண்டும் மறுநாள் காலை தான் மூலவரை தொட்டு பூஜிப்பார். மாலை வேலைகளில் தூர இருந்தபடி தீபாரதனைகள் செய்வது ஸம்ப்ராதாயம் . இத்தலம் கரூர் நகரம் மத்தியில் அமைந்துள்ளது. ஆதியில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு பின்பு காலப்போக்கில் மத்வயதி ஸ்ரீ வியாஸராஜரால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ முக்யப்ராணர் பிரதிஷ்டை செய்யப்பட்டு (வருடம் பற்றிய குறிப்பு இல்லை) அன்ற முதல் அந்த வீதிக்கே அனுமந்ராயர் கோவில் தெரு என பெயரிடப்பட்டது. காலப்போக்கில் அப்போது பூஜை செய்து வந்த அர்ச்சகர் கனவில் தோன்றி ஸ்ரீ நரசிம்மர் உத்தரவிட்டதற்கிணங்க வேறு ஊரிலிருந்து கிணற்ற நீரில் ஜலவாசம் செய்து வந்த ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை எடுத்து வந்து முறையாக பூர்வ பூஜைகள் செய்து தற்போது உள்ளபடி பிரதிஷ்டை செய்விக்கப்பட்டது. ஆதியில் பூஜை செய்யப்பட்டு வந்த விநாயகர் கோவிலில் உள்ளே அர்த்த மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு நித்ய பூஜை செய்யப்படுகிறது.
தல பெருமை
இது ஒரு பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோயிலாகும்இது ஒரு பழமையான கோவிலாகும்இது ஒரு பிராத்தனை தலமாகும்இது ஒரு பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோயிலாகும்இது ஒரு பழமையான கோவிலாகும்இது ஒரு பிராத்தனை தலமாகும்