Screen Reader Access     A-AA+
அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோயில், Sanapeeratti, Sanapiratti - 639004, கரூர் .
Arulmigu Sithi Vinayakarswamy Temple, Sanapeeratti, Sanapiratti - 639004, Karur District [TM025310]
×
Temple History

தல பெருமை

திருக்கோயில் கருவரை விமானம் இன்றியும் முன்பக்கம் திறந்த மேடை மீது நான்கு கல்தூண்கள் மேல் உள்ளது. தற்சமயம் இத்திருக்கோயிலில் ஒரு காலபூஜை நடைபெறுகின்றது. கிராம பூசாரியால் பூஜை செய்யப்படுகின்றது. துங்கக் கரிமுகத்துத் தூமணி, கஜமுகன், யானை முகத்தோன், வேழ முகத்தோன் ன்றெல்லாம் துதிக்கப்பெறும் கணபதி ஓம் கார செரூபி ஆவார். அங்கும்வியாபித்து நிற்கும் பரமாத்வாவின் சொரூபம் உள்ளவர். இவருக்கும் மூத்தவரான கடவுளரே இல்லை என்பதால் இவர் விநாயகர் என அழைக்கப்படுகிறார். பார்வதி பரமேஸ்வரிரின் மூத்த குமாரானாக அவதரித்து தேவர்களை கஜமுகன் என்ற அரக்கனி கொடுமையிலிருந்து காத்ததால் கணபதி என்று சிறப்பாக வணங்கப்படுகிறார். தேவர்களின் துயர் துடைத்த கணபதிக்கு பிரதிபலனாக தேவர்கள் சித்தி, புத்தி என்ற தேவ கன்னியரைத் திருமணம் செய்து கொடத்து வணங்கினார்கள்....