புராண பின்புலம்
மனிதன் தோன்றுவது அன்னையின் வயிற்றில் மறைவது பூமித்தாயின் வயிற்றில், எப்படித் தோன்றுகிறோமோ அதிலேயே மறைவோம் என்பதே இதில் அடங்கியுள்ள தத்துவம். இதன் உண்மை வடிவமே மாரியம்மன். அந்த வகையில் இந்த ஆலயத்தில் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே. மஞ்சள் நீர் கம்பம் உற்சவத்தின் போது வேப்பமரத்தின் மூன்று கிளைகளை உடை ஒரு பருதியை எடுத்து வந்து, அதில் இருக்கும் பட்டைகளை உரித்து வடிவமைத்து, மஞ்சள் பூசப்பட்டு, ஆற்றிலிருந்து பூஜை செய்து எடுத்து வரப்பட்டு, ஆலயத்தின் பலி பூடத்தின் அருகில் கம்பம் நடப்படும். இதை சுவாமியாகக் கருதுகிறார்கள். இதை மஞ்சள் நீர் கம்பம் என்று அழைக்கிறார்கள்.