Screen Reader Access     A-AA+
Arulmigu Vangalamman Temple, Vangal - 639116, கரூர் .
Arulmigu Vangalamman Temple, Vangal - 639116, Karur District [TM025398]
×
Temple History

தல பெருமை

அருள்மிகு வாங்கலம்மன் திருக்கோயில் கரூர் நாமக்கல் செல்லும் வழியில் வாங்கல் குப்பிச்சிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு வாங்கலம்மன் திருக்கோயிலின் மூலவர் வாங்கலம்மன் வடக்கு நோக்கி அமையப்பெற்றது இத்திருக்கோயிலின் சிறப்பாகும். திருக்கோயிலில் உள்ள நாகலிங்க மரம் ஐம்பது ஆண்டுக்கு மேற்பட்டதாகும். இத்திருக்கோயிலின் நாகலிங்க மரத்தை வழிபட்டு வந்தால் திருமண தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.